இனி இவங்க மட்டும் தான் இன்ஸ்டாவில் லைவ் வரலாம் - புதிய கட்டுப்பாட்டை விதித்த மெட்டா.!!
metta announce new restriction in insta live
உலகம் முழுவதும் இளைஞர்கள் மத்தியில் இன்ஸ்டா ரீல்ஸ் பிரபலமாக உள்ளது. அதிலும் இந்தியாவில் மட்டும் 43 கோடிக்கும் அதிகமானோர் இன்ஸ்டாகிராம் செயலியை பயன்படுத்துகின்றனர்.
இதற்கிடையே இன்ஸ்டாகிராமை இயக்கி வரும் தாய் நிறுவனமான மெட்டா அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் புதிய அப்டேடுகளை அறிமுகம் செய்து வருகிறது. இந்த நிலையில், மெட்டா நிறுவனம் இன்ஸ்டாகிராமில் ஒரு முக்கிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளது.

அதாவது, இன்ஸ்டாவில் உள்ள லைவ் வசதியை இனி அனைவரும் பயன்படுத்த முடியாத அளவுக்கு சில விதிமுறைகளை மாற்றியுள்ளது. அதாவது, குறைந்தபட்சம் 1,000 பின்தொடர்பவர்களைக் கொண்ட பொது கணக்கு வைத்திருப்பவர்கள் மட்டுமே லைவ் வீடியோக்களை வெளியிட முடியும். தற்போது வரை எந்தவொரு பயனரும், லைவ் வசதியை பயன்படுத்தும் அம்சத்தை இன்ஸ்டாகிராம் அனுமதித்திருந்தது. இனி அதில் மாறுதல்கள் நடந்துள்ளது.
English Summary
metta announce new restriction in insta live