இன்ஸ்ட்டாக்ராமில் சர்ச்சையை கிளப்பிய இர்ஃபானின் மனைவி.. எமூக வலைதளங்களில் கடும் விமர்சனம்!
Irrfan wife sparks controversy on Instagram Severe criticism on social media
யூடியூபர் இர்ஃபான் மற்றும் அவரது மனைவி ஆலியா தொடர்பான சர்ச்சைகள் தொடர்ந்து வெளிவந்து கொண்டே இருக்கின்றன. முன்பு, குழந்தையின் பாலினத்தை முன்கூட்டியே அறிவித்தது, பிரசவ அறையில் தொப்புள் கொடியை அறுத்தது போன்ற காரணங்களால் இர்ஃபான் பெரும் சர்ச்சையில் சிக்கியிருந்தார்.
இந்நிலையில், சமீபத்தில் ஆலியா குழந்தை பிறந்த பின் ஒப்பனை கலைஞராக (Makeup Artist) தன்னை அடையாளப்படுத்தி, பல்வேறு நிகழ்வுகளில் மேக்கப் செய்வதற்கான வீடியோக்களையும் பகிர்ந்து வருகிறார்.
இதனைத் தொடர்ந்து, ஒரு பிரபல தனியார் நிறுவனம் ஆலியாவுக்கு “வளர்ந்து வரும் ஒப்பனை கலைஞர்” என்ற விருதை வழங்கியுள்ளது. விருது பெற்ற மகிழ்ச்சியை சமூக வலைதளத்தில் பகிர்ந்த ஆலியா, எதிர்பாராதவிதமாக கடும் விமர்சனங்களையும் சந்தித்துள்ளார்.
பலர், “இந்த விருது உண்மையில் திறமையானவர்களுக்கு வழங்கப்பட வேண்டியது. ஆனால், இவர் யூடியூபர் இர்ஃபானின் மனைவி என்பதாலேயே இவ்விருது கிடைத்துள்ளது” என்று கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.

இந்த விமர்சனங்களுக்கு நேரடியாகவே ஆலியா, “உங்களுக்கு எல்லாம் வயிற்றெரிச்சல், அதனால்தான் இப்படி பேசுகிறீர்கள்” எனக் கண்டித்துள்ளார். அதேசமயம், இர்ஃபான் தனது மனைவியை பாதுகாக்க முனைந்து, “என் மனைவிக்கு திறமை இருக்கிறது. அதை எப்படி குறைத்து மதிப்பீர்கள்?” என வலியுறுத்தியுள்ளார்.
இதனால், விருதை பெற்ற மகிழ்ச்சியை பகிர்ந்த இந்த தம்பதிகள், விமர்சனங்களை எதிர்த்து சமூக வலைதளங்களில் “குடும்ப சண்டை” போல் நேரடி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
English Summary
Irrfan wife sparks controversy on Instagram Severe criticism on social media