கூகுள் தேடுபொறியில் இதையேல்லாமா இந்தியர்கள் தேடியுள்ளனர்... 2021ம் ஆண்டு இந்தியர்களின் கூகுள் தேடல்..!
Google search of Indians by 2021
2021 ஆம் ஆண்டு கூகுளே இந்தியர்கள் அதிகம் தேடிய குறித்த பட்டியல் வெளியாகியுள்ளது.
கூகுள் தேடுபொறியில் தங்களுக்கு தேவையான தகவலை தினமும் கோடிக்கணக்கான வருகின்றனர். இந்நிலையில் ஒன்றாம் ஆண்டு இந்தியர்கள் கூகிளில் அதிகம் தேவை குறித்தான தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
பிவி சிந்து:
ஒலிம்பிக் பேட்மிட்டன் போட்டிகளில் இந்தியாவிற்கு பெருமை தேடித் தந்தவர் பிவி சிந்து. ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் பெற்றார். பல சொந்தக் சாதனைகளுக்கு சொந்தக்காரரான பிவி சிந்துவின் சாதி கூகிளில் அதிகமாக தேடப்பட்ட உள்ளது. அவரின் சொந்த மாநிலமான தெலுங்கானா மற்றும் ஆந்திராவில் அவரின் சாதி குறித்து அதிகம் தேடியுள்ளனர்.
கொரோனா தடுப்பூசி:
கடந்த ஆண்டு உலகமெங்கும் பரவ ஆரம்பித்த கொரோனாவிற்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். கடந்த ஜனவரி முதல் இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. ஆரம்பத்தில் ஆர்வம் காட்டாத மக்கள் தற்போது தாமாக முன்வந்து தடுப்பூசி போட்டுக் கொள்கின்றனர். இந்நிலையில், தடுப்பூசி குறித்து சுவாரசியமான தேடுதல் ஒன்று நடைபெற்றுள்ளது அதாவது ஒரு தடுப்பூசி வீட்டிலேயே எப்படி தயாரிப்பது என்ற கேள்வியை மக்களிடம் கேட்டுள்ளனர்.

ரிஹானா:
வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்திய போது காவல்துறைக்கு விவசாயிகளுக்கும் மோதல் ஏற்பட்டது. இது இந்தியா மட்டுமின்றி உலகின் பல இடங்களிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதற்கு காரணம் அமெரிக்காவைச் சேர்ந்த பாடகி ரியானா தான். இதனை அடுத்து மதம் குறித்து இந்தியர்கள் அதிகம் தேடியுள்ளனர்.
மீராபாய் சானு :
டோக்கியோ ஒலிம்பிகில் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை தேடித்தந்தவர் மீராபாய் சானு. மீராபாய் சானு எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது இந்தியர்களின் கூகுள் தேடல் ஆக இருந்துள்ளது.
ஆக்சிஜன் தயாரிப்பது எப்படி:
கருணா இருண்ட அலையும் போது பல ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக உயிரிழந்தனர். இதனால் இந்தியர்கள் பலர் வீட்டிலேயே ஆக்சிஜன் தயாரிப்பது எப்படி இடங்களில் தேடியுள்ளனர்.
பார்க் அகர்வால்:
ட்விட்டரின் புதிய சிஇஓவாக இந்தியாவின் அகர்வால் பதவியேற்றுக் கொண்டது அடுத்து அவரின் சம்பளம் குறித்து பலரும் கூகுளில் தேடி உள்ளனர்.

தக்காளி இல்லாமல் சாம்பார் வைப்பது எப்படி:
இந்தியாவில் அடிக்கடி தக்காளி விலை அதிகரிப்பது வாடிக்கையாக உள்ளது சில நேரங்களில் கிலோ 200 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனையடுத்து, கடந்த சில இறக்குமுன் கிலோ தக்காளி 150 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் தக்காளி இல்லாமல் சாம்பார் மற்றும் உணவுப் பொருட்கள் செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ள இல்லத்தரசிகள் கூகுளே நாடி உள்ளனர்.
மிஸ் யுனிவர்ஸ்:
சமீபத்தில் நடந்து முடிந்த மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் இந்தியாவின் ஹர்னஸ் என்று பட்டம் வென்றார். இதனை அடுத்து அவரின் உயரம் வயது குறித்து இந்தியர்கள் அதிகம் கூகுளில் தேடியுள்ளனர்.
English Summary
Google search of Indians by 2021