வயதான தாயின் ஏக்கத்தை உணர்த்தி வைரலாகும் சிலிர்க்கவைக்கும் தொகுப்பு.! - Seithipunal
Seithipunal


பெற்றோர்கள் தரும் அன்பு என்பது அவர்கள் இருக்கும் போது பெரும்பாலானோருக்கு துளியளவும் புரியாது. அவர்களின் மறைவுக்கு பின்னர் அல்லது அவர்கள் பிரிந்து சென்ற பின்னர் அவர்களின் அருமை உணர தொடங்கும். அந்த வகையில், வயதான தாயின் மனக்குமுறலை வெளிப்படுத்தும் பொருட்டு பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. 

அந்த பதிவில், " நீ அழுத போது உன்னை தரதரவென்று இழுத்துப் போய் பள்ளிக் கூடத்தில் சேர்த்தேன் படித்து பெரிய ஆளாக வர வேண்டும் என்ற எண்ணத்தில்..

இன்று நான் அழுகிறேன் என்னை இழுத்துப் போய் முதியோர் இல்லத்தில் சேர்க்கிறாயே அங்கே நான் எதை படிக்க வேண்டுமென்று பத்துமாதம் உன்னை வயிற்றில் சுமந்தபோது பாரமாக நான் நினைக்கவில்லை..

உன் பத்தினி வந்ததும் உன் வீட்டில் நான் ஒரு ஓரமாக இருப்பதையே நீ பாரமாக நினைக்கிறாயே.. நீ ஓடி ஓடி விளையாடிய போது நீ செல்லும் இடமெல்லாம் உன் பின்னாலே வந்து உனக்கு சோறு ஊட்டி உன் வயிறு நிறைந்ததில் என் வயிறும் மனமும் நிறைந்தது...

எனக்கு வயிறாற உணவு வேண்டாம்.. ஒரு வேளையானலும் உன் வீட்டு சோறு போதும்...

உன் வருங்காலத்திற்காக உன்னை பெற்று வளர்த்து படிக்க வைத்து,கல்யாணம் முடித்து நீ வாழ்வதற்காக உன்னை ஆளாக்கினேன்....

என் எதிர்காலத்திற்காக நான் சாவதற்கு என்னை நீ பார்த்துக் கொள்ளக் கூட மறுக்கிறாய்....

பிள்ளையேப் பெறாமல் இருந்திருந்தால் மலடியாகிருப்பேன் யாருமே இல்லாதிருந்தால் அனாதையாகிருப்பேன்...

பிள்ளைகளைப் பெற்றும் இன்று நான் முதியோர் இல்லத்தில்....

நான் மலடியா... நான் அனாதையா... தாயின் ஏக்கம்.... " என்று அந்த பதிவு வைரலாகி வருகிறது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Feelings of Aged Mother Poet Social Media


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->