மாமியாரிடம் வீட்டு சாவி குடுக்காமல் டெக்னிக்காக வேலை செய்த மருமகள்..! - Seithipunal
Seithipunal


ஒரு பெண் தனது மாமியாரிடம் தனது வீட்டிற்கு போலி சாவியைக் கொடுத்தார். தனது தனியுரிமையை ஆக்கிரமிக்கும் மாமியாரை சமாளிக்க பெண் ஒருவர் புதிய யுக்தியை கையாண்டுள்ளார். அவர் தனது கதையை ரெட் இட்டில் பகிர்ந்துள்ளார்.

பெயர் வெளியிடப்படாத பெண், தானும் தனது கணவரும் சமீபத்தில் ஒரு புதிய வீட்டை வாங்கியதாகவும், தனது மாமியார் வீட்டின் மாற்று சாவியைக் கேட்டதாகவும் கூறினார். இருந்தாலும் வீட்டு சாவியை மாமியாரிடம் கொடுக்க அவள் கணவனுக்கு விருப்பம் இல்லை, என்ன செய்வது என்று யோசித்து வருகிறான். காரணம், இதற்கு முன்பு அந்த பெண் தனது கணவருடன் தனியாக இருந்த போது திடீரென மாமியார் வீட்டிற்கு வந்துள்ளார். மேலும் அடிக்கடி இவ்வாறு செய்து அவர்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தியிருந்தார்.

இதனால் வீடு மாறிய மருமகள், மாமியாரிடம் சாவியை கொடுக்க என்ன செய்வது என்று யோசித்து மாற்று சாவி என்ற பெயரில் போலி சாவியை கொடுத்துள்ளார். இருப்பினும், துரதிர்ஷ்டவசமாக நீண்ட காலமாக அந்தப் பெண்ணால் தனது மாமியாரை சமாளிக்க முடியவில்லை. கிறிஸ்மஸ் விருந்துக்கு அனைவரும் கூடியிருந்தபோது, அந்த ரகசியத்தை கண்டுபிடித்த மாமியார் தன்னுடன் சண்டையிட்டதாக அந்த பதிவில் கூறியிருந்தார்.

பொறுமை இழந்தவர் , கொடுத்த சாவி போலியானது என்று எப்படி கண்டுபிடித்தாய் என்று கேட்டுள்ளனர். வீட்டில் மகனும் மருமகளும் இல்லாத பட்சத்தில் சோதனை செய்ததாக மாமியார் பதிலளித்துள்ளார். மாமியார், தான் செய்தது தவறு என்று ஒப்புக்கொள்ளாமல், மருமகள் மீதுதான் பழி சுமத்துகிறார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

daughter in law without giving the house key to the mother in law


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் லியோ திரைப்படம் எப்படி இருக்கு? உங்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா?Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் லியோ திரைப்படம் எப்படி இருக்கு? உங்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா?
Seithipunal
-->