தப்பித்தவறி இந்த எண்ணுக்கு அழைத்து விடாதீர்கள்! மத்திய அரசின் பகிரங்க எச்சரிக்கை! - Seithipunal
Seithipunal


பொதுமக்கள் தங்களின் கைபேசியின் மூலம் *401# எண்ணைத் தொடர்புகொள்ள வேண்டாம் என்று மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.

இதன் பின்னணி என்ன என்று பார்ப்போம்:

நம்முடைய செல்போனிலிருந்து *401# என்ற எண்ணுக்கு டயல் செய்தால், நமக்கு வரும் அழைப்புகள் வேறுஒருவருக்கு கால் ஃபார்வேடு ஆகிவிடும். 

இதனை மர்ம நபர்கள் மோசடி செய்ய பயன்படுத்த ஏதுவாக இருப்பதால், பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு மத்திய அரசின் தொலைத்தொடா்புத்துறை எச்சரித்துள்ளது.

இந்த நம்பருக்கு அழைக்க சொல்லை, எப்படி உங்களை ஏமாற்றுவார்கள்? 

வாடிக்கையாளா் சேவை மைய பிரதிநிதி என்ற பெயரில் உங்களை தொடா்புகொள்ளும் அந்த மோசடி நபா்கள், சம்பந்தப்பட்ட வாடிக்கையாளரின் சிம் காா்ட் அல்லது தொலைத்தொடா்பில் பிரச்னை ஏற்பட்டுள்ளதாகக கூறுவார்கள். 

அப்பாவும் நீங்கள் பயப்படவில்லை என்றல் ஒருபடி மேலே சென்று உங்கள் இணைப்பு கட் செய்யப்படும் என்று பரபரப்பாக சொல்வார்கள்.

இந்த வார்த்தைகளை நீங்கள் நம்பினால், உடனே அந்த மர்ம நபர்கள், "இந்தப் பிரச்னையை சரி செய்ய *401# என்ற எண்ணுக்கு டயல் செய்ய சொல்வார்கள்.

அப்படி நீங்கள் அழைத்தாள், உங்களுக்கு வரும் அழைப்புகள், அடையாளம் தெரியாத கைப்பேசி எண்ணுக்குத் திருப்பி அனுப்பப்படும். இதன் மூலம் அந்த மா்ம நபா்கள் மோசடி சம்பவங்களில் ஈடுபடுவார்கள். மேலும் அதிர்ச்சியாக நமக்கு வரும் ஓடிபியும், மோசடியாளர்களின் கைப்பேசிக்குத்தான் செல்ல அதிக வாய்ப்புள்ளதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்கிறது மத்திய அரசு.

இதனை தடுக்க என்ன செய்யவேண்டும்?

முதலில் இந்த தகவல்களை உங்கள் உறவினர்கள், நண்பர்களுக்கு உடனடியாக தெரியப்படுத்துங்கள்.

அடுத்ததாக முன்பின் தெரியாத எண்களிலிருந்து வரும் அழைப்புகளை எச்சரிக்கையுடன் கையாளுங்கள். அவர்கள் சொல்லும் எண்ணுக்கு அழைக்காதீர்கள். உங்கள் தனிப்பட்ட வங்கி, ஆதார் ATM கார்டு, OTP விவரங்களை எக்காரணம் கொண்டும் கொடுக்கவே கூடாது. வாட்ஸ்அப், SMS உள்ளிட்ட எந்த தளத்திலிருந்து உங்களுக்கு லிங்க்-வந்தாலும் எத்தனை கிளிக் செய்யாமல் தவிர்த்துவிடுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Central Govt Request for people 2024


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->