மோடியின் ரூ.10 லட்சம் மதிப்பிலான கோட் சூட், ரூ1.5 லட்சம் மதிப்பிலான கண்ணாடி பற்றி விவாதிப்போம்? காங்கிரஸ் பதிலடி! - Seithipunal
Seithipunal


'பாரதத்தை இணைப்போம்' நடைபயணத்தில் ஈடுபட்டுள்ள, காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி அணிந்திருந்த ஆடை குறித்து, சமூகவலைத்தளங்களில், பாஜக-காங்கிரஸ் இடையே கடும் மோதல் உண்டாகியுள்ளது.

மத்தியில் ஆளும் பாஜக அரசின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், நாடு முழுவதும் ஒற்றுமையை வலியுறுத்தியும், காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி 'பாரதத்தை இணைப்போம்' எனும் பெயரில் நடைபயணம் மேற்கொண்டு உள்ளார்.

இந்த நடைபயணத்தின்போது ராகுல்காந்தி அணிந்திருந்த வெள்ளை நிற ஆடையின் விலை ரூ.41,257 எனக் குறிப்பிட்டு “பாரதமே பாருங்கள்” என பாஜக தனது டிவிட்டரில் விமர்சனம் செய்து பதிவிட்டது.


இதற்க்கு பதிலளித்துள்ள காங்கிரஸ் கட்சி, "இந்தியாவை ஒருங்கிணைப்போம் யாத்திரைக்கு கூடும் மக்கள் கூட்டத்தைப் பார்த்து பயமா? 

வேலையின்மை, பணவீக்கம் உள்ளிட்ட பிரச்னைகளைப் பற்றி பேசுங்கள். ஆடைகளைப் பற்றி பேசவேண்டுமென்றால் மோடியின் ரூ.10 லட்சம் மதிப்பிலான கோட் சூட், ரூ1.5 லட்சம் மதிப்பிலான கண்ணாடி குறித்து விவாதிக்கலாம்" என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP VS CONGRESS IN TWITTER


கருத்துக் கணிப்பு

தமிழக ஆளுநரின் செயல்பாடுகள்.,Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழக ஆளுநரின் செயல்பாடுகள்.,
Seithipunal