எந்த ஒரு பந்தாவும் இல்லாத எளிய மனிதர் நடிகர் அஜீத் குமார்; இந்த நாளை என்னால் மறக்க முடியாது - பைக்கரின் இன்ஸ்டா பதிவு வைரல்! - Seithipunal
Seithipunal


"நான் உங்களுக்கு ஒரு கதை சொல்கிறேன். எல்லாமே ஏதோ ஒரு காரணத்திற்காகத்தான் நடக்கும் என்பார்கள்" எனத் தொடங்கும் இன்ஸ்டால் பதிவு வைரல்!

நடிகர் அஜித்குமார் நடிக்கும் AK61 படப்பிடிப்பிற்கு இடையே இந்தியா முழுவதும் பயணம் மேற்கொண்டு வருகிறார். அவர் மேற்கொள்ளும் பயணத்தின் புகைப்படங்கள் காணொளிகள் இணையதளத்தில் அவ்வப்போது வைரலாகும். அவ்வாறு பயணம் மேற்கொள்ளும் பொழுது ஒரு இளைஞருக்கு அவர் உதவி செய்துள்ளார். இது தொடர்பாக அந்த இளைஞர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை எழுதியுள்ளார். அந்த பதிவு இப்பொழுது வைரலாகி வருகிறது.

அந்தப் பதிவில் "நான் உங்களுக்கு ஒரு கதை சொல்கிறேன். எல்லாமே ஏதோ ஒரு காரணத்திற்காகத்தான் நடக்கும் என்பார்கள். முதன்முறையாக என் பைக் பயணத்தில் எனக்கு டயர் பஞ்சர் ஆகிவிட்டது. நான் அந்த சமயத்தில் உதவி தேடினேன்.

அப்பொழுதுஎனது கனவு பைக்கான பிஎம்டபிள்யூ 1250ஜிஎஸ்ஏ என்னை கடந்து சென்றது. நான் அவரை நோக்கி கை அசைத்து அவரிடம் ஏர் கம்ப்ரசர் கேட்டேன். அதற்கு அவர் என்னிடம் இருக்கிறது. ஆனால் அது பின்னால் வரும் காரில் தான் உள்ளது 10 நிமிடம் ஆகும் என்றார். 

அவரிடம் தொடர்ந்து நான் பேச்சு கொடுத்தேன். எனது பெயர் மற்றும் வேலை சொல்லி அறிமுகமாகி கொண்டேன். அவரிடம் கேட்டபொழுது "நான் அஜித்" என்று அறிமுகம் படுத்திக் கொண்டார். உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி என்று கூறினேன்.

அதன் பின்னர் கொஞ்சம் கூட யோசிக்காமல் பைக்கில் இருந்து இறங்கி அவரே எனது பைக்கை சரி செய்தார். அடுத்து இரண்டு மணி நேரம் நாங்கள் பயணித்தோம். பின்னர் தயங்கித் தயங்கி உங்களிடம் ஒரு டீ குடிக்கலாமா அது எனக்கு ஒரு பாக்கியம் என்றேன். அடுத்த டீக்கடையில் டீ குடித்தோம். தொடர்ந்து பத்து நிமிடங்களுக்கு மேல் அவரது முந்தைய ரூட் மேப் பற்றி உரையாடினோம். பின்பு நாங்கள் பயணிக்கும் ரூட்டை கேட்டு எங்களுக்கு வாழ்த்து சொல்லி விட்டு கிளம்பினார்.

இந்தச் சம்பவத்தை பதிவிட இரண்டே காரணம் தான்:

1) மிகப்பெரிய மனிதர் ஒருவர் எந்த ஒரு பந்தாவும் இல்லாமல் எளிமையான அணுகு முறையை கொண்டிருந்தார் .அவருடைய ரசிகர்கள் மக்கள் மீது அற்புதமான அன்பைக் கொண்டிருக்கிறார்.

2) எனக்கு அதிர்ஷ்டம் அடித்தது, இந்த நாளை என்னால் மறக்க முடியாது. அவர் எனது பார்வையை முற்றிலும் மாற்றினார் என்று இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

அந்தப் பதிவின் இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

https://www.instagram.com/p/CijWws-L_QI/?utm_source=ig_web_copy_link

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actor Ajith Kumar is a simple man with no strings attached Biker Insta Post Goes Viral


கருத்துக் கணிப்பு

மக்கள் வரிப்பணத்தை எடுத்து கொடுத்துவிட்டு, மக்களையே ஓசில போறிங்க என்று அசிங்கப்படுத்தும் திமுக அமைச்சரின் பேச்சு?Advertisement

கருத்துக் கணிப்பு

மக்கள் வரிப்பணத்தை எடுத்து கொடுத்துவிட்டு, மக்களையே ஓசில போறிங்க என்று அசிங்கப்படுத்தும் திமுக அமைச்சரின் பேச்சு?
Seithipunal