பெண் போலீஸ் அதிகாரி ஆட்டோவின் பின்னால் சிக்கி இழுத்து செல்லப்பட்ட சம்பவம்! நெஞ்சை பதறவைக்கும் வைரல் வீடியோ!
A heart wrenching viral video shows a female police officer being dragged behind an auto
மகாராஷ்டிரா மாநிலத்தின் சத்தாரா மாவட்டத்தில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. குடிபோதையில் இருந்த ஒரு ஆட்டோ ஓட்டுநர், பெண் போலீஸ் அதிகாரியை 120 மீட்டர் தூரம் ஆட்டோவில் இழுத்துச் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாக்யஸ்ரீ ஜாதவ் என்ற பெண் போலீஸ் அதிகாரி, ரோட்டில் சென்று கொண்டிருந்த ஆட்டோவை நிறுத்துமாறு சைகை செய்துள்ளார். ஆனால், ஆட்டோ ஓட்டுநர் வாகனத்தை நிறுத்தாமல் வேகமாக இயக்கியுள்ளார். அந்த நேரத்தில், ஆட்டோவில் சிக்கி பாக்யஸ்ரீ ஜாதவ் சுமார் 120 மீட்டர் தூரம் இழுத்துச் செல்லப்பட்டார்.
இந்த அதிர்ச்சியூட்டும் காட்சி அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி, தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது.
பின்னர் அங்கிருந்த பொதுமக்கள் ஆட்டோவை தடுத்து நிறுத்தி பெண் போலீஸ் அதிகாரியை மீட்டனர். உடனடியாக காயமடைந்த பாக்யஸ்ரீ ஜாதவ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனையடுத்து, சம்பவத்தில் ஈடுபட்ட ஆட்டோ ஓட்டுநரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
A heart wrenching viral video shows a female police officer being dragged behind an auto