அதிமுக அரசியல் சூடு! ஓ.பி.எஸ் - செங்கோட்டையன் ஒரே காரில் பயணம்...! - புதிய சிக்னலா? - Seithipunal
Seithipunal


அதிமுக அரசியல் அரங்கில் கடந்த சில மாதங்களாக அமைதியான “பனிப்போர்” நீடித்து வந்தது. அதாவது, கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் மூத்த தலைவரான செங்கோட்டையனுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் தீவிரமடைந்திருந்தன. இந்த மோதல் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு, அதிமுக உட்பகை மீண்டும் வெளிச்சத்திற்கு வந்தது.

இதையடுத்து, செங்கோட்டையன் கட்சியில் ஒதுக்கப்பட்ட நிலைக்கு தள்ளப்பட்டார். அதிமுகவில் இருந்து விலகிச் சென்றவர்களை மீண்டும் ஒன்றிணைக்க வேண்டும் என்று அவர் வெளிப்படையாகக் கூறியதும், கட்சிக்குள் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதை கட்சிக்கு எதிரான நடவடிக்கையாகக் கருதி, எடப்பாடி பழனிசாமி நேரடியாக உத்தரவிட்டு செங்கோட்டையனை அனைத்து கட்சி பொறுப்புகளிலிருந்தும் நீக்கியார்.

செங்கோட்டையனின் “ஒன்றிணைப்பு” கருத்துக்கு சசிகலா, டிடிவி தினகரன், மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் திறந்த ஆதரவு தெரிவித்தது, அதிமுக அரசியல் நிலைமையை இன்னும் சூடுபடுத்தியது.இந்நிலையில், அதிமுக வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில், மதுரையிலிருந்து பசும்பொன் நோக்கி ஓ.பன்னீர்செல்வத்துடன் ஒரே காரில் செங்கோட்டையன் பயணம் செய்துள்ளார்.

இது “புதிய அரசியல் சிக்னல்” என பலர் கருதுகின்றனர்.இருவரும் முத்துராமலிங்கத் தேவரின் ஜெயந்தி மற்றும் குருபூஜையை ஒட்டி பசும்பொன்னில் உள்ள நினைவிடத்தில் மரியாதை செலுத்துவதற்காக ஒரே வாகனத்தில் சென்றிருப்பது, அதிமுக அரசியலில் ஒன்றிணைப்பு மீண்டும் உயிர்ப்பெடுக்குமா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.செங்கோட்டையன் ஓ.பன்னீர்செல்வம்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

AIADMK politics heats up OPS Sengottaiyan travel same car new signal


கருத்துக் கணிப்பு

வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப்பணி...



Advertisement

கருத்துக் கணிப்பு

வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப்பணி...




Seithipunal
--> -->