திருக்கோவிலூரில் சோகம்! திருமண அழுத்தம் தாங்காமல் பல் மருத்துவர் தற்கொலை..! நடந்து என்ன...? - Seithipunal
Seithipunal


கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே நடந்த ஒரு சோகமான சம்பவம் அப்பகுதியை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
திருக்கோவிலூர் சந்தைப்பேட்டை சுப்பிரமணிய நகர் பகுதியில் வசித்து வந்த கிருஷ்ணனின் மகள் அமிர்த வர்ஷினி (24) பல் மருத்துவராக பணியாற்றி வந்தார்.

திறமையானவரும், மகிழ்ச்சியான குணமுடையவருமான அவர் மீது பெற்றோர் சமீபத்தில் திருமண ஆலோசனைகளைத் தொடங்கியிருந்தனர்.

ஆனால், தற்போது திருமணம் செய்ய வேண்டாம் என அமிர்த வர்ஷினி தெளிவாக தெரிவித்திருந்ததாக கூறப்படுகிறது. இருந்தபோதிலும், குடும்பத்தினர் திருமண ஏற்பாடுகளை தொடர்ந்து மேற்கொண்டனர்.

இதனால் மன அழுத்தத்தில் சிக்கிய அமிர்த வர்ஷினி, நேற்று இரவு வீட்டின் மாடியில் உள்ள அறையில் தூக்குப்போட்டு உயிரை மாய்த்துக் கொண்டார்.அவரை காண்ட குடும்பத்தினரும் உறவினர்களும் கதறி அழுதனர்.

சம்பவ தகவலின்பேரில் திருக்கோவிலூர் போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்தச் சம்பவத்தைக் குறித்துப் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.திருமண அழுத்தத்தால் மனம் தளர்ந்து தற்கொலை செய்த இளம் பெண் மருத்துவரின் மரணம், திருக்கோவிலூர் பகுதியில் பெரும் துயரமும் பரபரப்பும் ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Tragedy Thirukovilur Dentist commits suicide pressure from marriage What happened


கருத்துக் கணிப்பு

வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப்பணி...



Advertisement

கருத்துக் கணிப்பு

வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப்பணி...




Seithipunal
--> -->