57% முதல் 47% வரை! அமெரிக்கா-சீனா வரி குறைக்கப்பட்டு வர்த்தக உறவுகள் வலுப்பெறுகிறது...!
From 57 to 47 US China tariffs are reduced and trade relations strengthening
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் கடந்த 5 நாட்கள் தொடர்ந்த ஆசிய பயணத்தின் போது தென்கொரியாவை வந்தார். அங்கு நடைபெறவிருக்கும் ஆசியா-பசிபிக் பொருளாதார கூட்டமைப்பு (APEC) மாநாட்டில் கலந்துகொள்வதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, புசான் நகரில் அமெரிக்கா மற்றும் சீனா தலைவர்கள் நேரில் சந்தித்து முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினர். இரு தலைவர்களும் பரஸ்பர வரி விதிப்புகள், அரிய வகை கனிமம் மற்றும் வர்த்தக கட்டுப்பாடுகள் போன்ற வாணிபச் சிக்கல்களைப் பற்றி ஆலோசனை மேற்கொண்டனர்.

இந்த சந்திப்பு 1 மணி 40 நிமிடங்கள் நீடித்தது.மேலும், பேச்சுவார்த்தைக்கு பிறகு டிரம்ப் தெரிவித்துள்ளதாவது,"சீன அதிபர் ஜி ஜின்பிங் உடனான சந்திப்பு மிகச் சிறப்பாகவும் பயனுள்ளதாகவும் இருந்தது. நாங்கள் எப்போதும் நல்ல உறவை கொண்டுள்ளோம். ஜின்பிங் ஒரு சிறந்த தலைவர். நீண்டகாலத்திற்கு இது உறுதியான வியாபார மற்றும் நட்புப் பொருளாதார உறவை உருவாக்கும்" .
அவரது அறிவிப்பில், சீன பொருட்களுக்கு விதிக்கப்பட்ட இறக்குமதி வரி 57% இருந்து 47% ஆக குறைக்கப்படுவதாக கூறியுள்ளார். மேலும், வர்த்தக ஒப்பந்தங்களுக்காக அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் சீனாவுக்கு வருவதாகவும், பின்னர் சீன அதிபர் அமெரிக்காவுக்கு வருவதாகவும் தெரிவித்தார்.
சிறப்பாக, சீனாவுக்கு அமெரிக்காவில் இருந்து சோயாபீன்ஸ் ஏற்றுமதி செய்யும் விவகாரம் துவங்கிவிட்டது என்றும், மண் ஏற்றுமதியில் தடைகள் இனி இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.சீன அதிபர் ஜின்பிங் தனது கருத்தில் தெரிவித்ததாவது,"அமெரிக்கா-சீனா நட்பு மற்றும் கூட்டாண்மை முக்கியம்.
உலக பொருளாதார முன்னேற்றத்திற்கு இரு நாடுகளும் இணைந்து செயல்பட வேண்டும். சில வேறுபாடுகள் இயல்பானவை; ஆனால் நட்பு மற்றும் ஒத்துழைப்பு உலக பொருளாதார நிலையை மேம்படுத்தும்".இதன் மூலம் அமெரிக்கா-சீனா வர்த்தக உறவுகளில் புதிய அத்தியாயம் திறந்துள்ளது மற்றும் உலக சந்தையில் வியாபாரச் சூழல் மீண்டும் சீரமைக்கப்போகிறது.
English Summary
From 57 to 47 US China tariffs are reduced and trade relations strengthening