வாக்காளர் திருத்தப் பணியில் வெளிமாநிலரின் பதிவு குறித்த விவாதம் தீவிரம்..! -அமைச்சர் கருத்து வைரல் ...!
debate registration foreigners voter registration process intense Ministers comment goes viral
புதுக்கோட்டையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி, வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் தொடர்பாக முக்கியமான கருத்துக்களை பகிர்ந்தார்.அவர் தெரிவித்ததாவது,"வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணியை எதிர்த்து பல்வேறு சமூக மற்றும் அரசியல் இயக்கங்கள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்குத் தொடுத்துள்ளன.

தமிழகத்தில் இந்த பணியை மேற்கொள்கிற அரசு ஊழியர்கள் பெரும்பாலும் நேர்மையாகவும் பொறுப்புடன் செயல்படுகிறவர்களும் ஆவார்கள். ஆனால், சில நேரங்களில் மேலதிக கட்டளைகளின்படி செயல்பட வேண்டிய நிலை ஏற்படுகிறது” என்றார்.இதைத் தொடர்ந்து அவர் தெரிவித்ததாவது,"தற்போது தமிழகத்தில் வெளிமாநிலங்களில் இருந்து வேலைக்காக வரும்வர்களின் எண்ணிக்கை கோடிக்கணக்காக அதிகரித்துள்ளது.
பீகார், ஜார்கண்ட், மேற்குவங்காளம், ஒடிசா உள்ளிட்ட பல மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கானோர் தமிழகத்துக்கு வந்து தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் பெரும்பாலும் தற்காலிகமாக வந்து பண்டிகை நாட்களில் தங்கள் மாநிலங்களுக்கு திரும்பி விடுகிறார்கள்.
அவர்கள் தமிழகத்தில் குறுகிய காலம் மட்டுமே தங்கி இருப்பதால், இங்குள்ள அரசியல் நிலைப்பாடுகளை அறிய வாய்ப்பே இல்லை. அவர்கள் தங்கள் மாநில அரசியலை அடிப்படையாகக் கொண்டு செயல்படுகிறார்கள். எனவே, இவ்வகை தற்காலிக தொழிலாளர்களை தமிழக வாக்காளர் பட்டியலில் சேர்ப்பது பொருத்தமற்றது என்பதே எங்களது நிலைப்பாடு.
இதற்கு மாறாக, தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் வெளிமாநிலங்களுக்கு செல்வது பெரும்பாலும் நிரந்தர வேலைவாய்ப்புகளுக்காக, அங்கு நீண்டகாலம் தங்குவதற்காகத்தான். எனவே, அவர்கள் அங்குள்ள வாக்காளர் பட்டியலில் சேர்வது இயல்பானது” என்று அமைச்சர் ரகுபதி வலியுறுத்தினார்.
English Summary
debate registration foreigners voter registration process intense Ministers comment goes viral