காதல் திருமணம் செய்த இளைஞன் தூக்கிட்டு தற்கொலை! நண்பர்களுக்கு அனுப்பிய கடிதத்தால் அம்பலமான பல திடுக்கிடும் உண்மைகள்! - Seithipunal
Seithipunal


கடலூர் மாவட்டம், பெண்ணாடம் அருகே உள்ள இறையூர் கிராமத்தில் வருபவர் சபாபதி. இவரது  மகன் பரந்தாமன்.தலித் சமூகத்தைச் சேர்ந்த இவர்  தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
 
இவர் மதுரை உசிலம்பட்டி அருகில் உள்ள முத்தையம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ராமு என்பவரின் மகள் சிவானியை காதலித்து வந்துள்ளனர். ஆதிக்கச் சமூகத்தைச் சேர்ந்த இவர் குடும்பத்துடன் புனேவில் வசித்து வருகிறார். 

இந்நிலையில் இவர்களது காதல் விவகாரம் சிவானியின் குடும்பத்திற்கு தெரியவந்த நிலையில் அவர்கள் மறுப்பு தெரிவித்து சிவானியைக் கடுமையாகக் கண்டித்துள்ளனர்.இதனைத்தொடர்ந்து பரந்தாமன் சிவானியை அழைத்துவந்து  பதிவு திருமணம் செய்துகொண்டார் .

          

இதற்கிடையில், சிவானியின்  குடும்பத்தினர் தனது மகளைப் பரந்தாமன் கடத்திச்சென்று திருமணம் செய்துகொண்டதாகவும், தனது மகள் 18 வயது பூர்த்தியடையாதவர் என்றும் அதற்கான ஆவணங்களோடு வழக்கு தொடர்ந்தனர். இதனை தொடர்ந்து பரந்தாமன் கைது செய்யப்பட்டார்.69 நாட்கள் சிறையில் இருந்த பரந்தாமன் கடந்த மாதம் இறுதியில், நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்தார்.

இந்நிலையில் சமீபத்தில் பரந்தாமன் புனே அருகில் ராஜ்கோட்நகரில் உள்ள ஒரு தனியார் விடுதியில் தூக்குமாட்டி தற்கொலை செய்துகொண்டார்.

அதுமட்டுமின்றி பரந்தாமன் சிவானியின் தந்தை மற்றும் உறவினர்கள் தன்னை மிரட்டியது குறித்தும், காவல்துறை, சிவானியின் பெற்றோருடைய பேச்சை கேட்டு காவல்துறையினர் தன்னையும், தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களையும் அடித்து சித்திரவதை செய்ததையும் தன் கைப்பட பல பக்கம் கடிதம் எழுதி தனது நண்பர்களுக்கு அனுப்பியுள்ளார். 

மேலும் அவரது நண்பர்கள் பரந்தாமனின் மனைவியை வைத்து போன் செய்து,அவனை புனே வரவழைத்து கொலை செய்துள்ளனர் என போலீசாரிடம் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

இந்நிலையில் போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

young man comits suicide for love marriage


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->