காதல் திருமணம்.. 6 மாதத்தில் பறிபோன உயிர்.. கணவனால் நடந்த விபரீதம்.!! - Seithipunal
Seithipunal


சென்னை பெரம்பூர் பகுதியை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவர் கீர்த்தனா என்ற பெண்ணை காதலித்து வந்த நிலையில், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து, இருவரும் தனியாக வசித்துவந்தனர். கீர்த்தனா சூப்பர் மார்க்கெட் ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார். ஆனால் ராமச்சந்திரன் எந்த வேலைக்கும் செல்லாமல் வீட்டிலேயே செல்போனை பயன்படுத்திக்கொண்டே இருந்துள்ளார். இதனால் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு உள்ளது. 

இந்நிலையில், மீண்டும் கணவன் மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது மனமுடைந்த கீர்த்தனா பூச்சி மருந்தை குடித்து உள்ளார். இதையடுத்து அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு ராமச்சந்திரன் கொண்டு சென்று அனுமதித்தார். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். 

கீர்த்தனாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று முன்தினம் கீர்த்தனா பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து, திருவிக நகர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

woman suicide after marriage


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->