வரதட்சிணைக்காக அவமானம்: திருமணத்திற்குச் சில மணிநேரங்களுக்கு முன் மணப்பெண் எடுத்த துணிச்சலான முடிவு!
UP Dowry Bride Wedding stops
உத்தரப் பிரதேச மாநிலம் பரேலியில், திருமணத்திற்குச் சில மணிநேரங்களே இருந்த நிலையில், வரதட்சிணையாக ரூ. 20 லட்சம் ரொக்கமும், ஒரு பிரீஸ்ஸா காரும் கேட்டு மணமகனும் அவர் குடும்பத்தினரும் மணமகளை அவமானப்படுத்தியதால், ஆத்திரமடைந்த மணப்பெண் திருமணத்தை நிறுத்தினார்.
நடந்தது என்ன?
விடிந்தால் திருமணம் நடக்கவிருந்த நிலையில், அலங்கரிக்கப்பட்ட வண்டியில் வந்த மணமகன், தாலி கட்டுவதற்கு முன்பாகவே வரதட்சிணையைக் கேட்டார். மணமகளின் தந்தை சமாதானம் பேச முயன்றும், மணமகன் ஏற்க மறுத்து, அனைவர் முன்னிலையிலும் அவரது தந்தையையும், சகோதரனையும் அவமானப்படுத்தும் விதமாகப் பேசினார்.
இதைக் கண்டு வெகுண்டெழுந்த மணமகள், வரதட்சிணைப் பேராசை பிடித்தவர்களைத் தான் திருமணம் செய்ய மாட்டேன் என்று அறிவித்து, துணிச்சலாகத் திருமணத்தை நிறுத்தினார்.
மணமகளின் மனக்குறை:
இதுகுறித்து வீடியோ வெளியிட்ட மணமகள், "எனது தந்தைக்கு மரியாதை கொடுக்கத் தெரியாத நபருடன் என் வாழ்நாளைக் கழிக்க நான் விரும்பவில்லை. வேறு எந்தவொரு பெண்ணுக்கும் இந்த நிலை வரக்கூடாது" என்று கண்ணீருடன் குறிப்பிட்டார்.
இந்த வீடியோ இணையத்தில் வைரலாகப் பரவிய நிலையில், உத்தரப் பிரதேச காவல்துறை இந்த விவகாரத்தில் தலையிட்டுள்ளது. இருதரப்பிலும் விசாரணை நடைபெற்று வருவதாகவும், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை உறுதியளித்துள்ளது.
English Summary
UP Dowry Bride Wedding stops