இன்ஸ்டா காதலனை நம்பி காட்டுக்கு போன இளம்பெண்! வாயில் மதுவை ஊற்றி நடந்த கொடூரம்! - Seithipunal
Seithipunal


கர்நாடகாவில் இன்ஸ்டாகிராமில் பழகிய இளம் பெண்ணை நேரில் வரவழைத்து, மது கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. 

கர்நாடக மாநிலம், உடுப்பி மாவட்டம், கார்கலாவை பகுதியை சேர்ந்த இளம் பெண்ணும், அல்தாப் என்பவரும் கடந்த இரண்டு மாதங்களாக instagram மூலம் நண்பர்களாக பழகி வந்துள்ளனர். 

இந்த நிலையில், இருவரும் நேரில் சந்திக்க திட்டமிட்டு, அதன்படி கார்காலா பகுதியில் சந்தித்துள்ளனர். அப்போது, அல்தாப் அந்த இளம் பெண்ணை காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்று, கட்டாயப்படுத்தி மது குடிக்க வைத்துள்ளார். 

மேலும், மதுபானத்தில் போதைப் பொருள் கலக்கப்பட்டு இருந்ததாகவும் சொல்லப்படுகிறது. தொடர்ந்து அல்தாப் அந்த இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். 

காட்டுப் பகுதியில் சத்தம் கேட்டு அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் வலதுசாரி ஆர்வலர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அந்த இளம் பெண்ணை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

மேலும், அல்தாப் மற்றும் அவரது கூட்டாளி ஒருவர் என மொத்தம் இரண்டு பேரை கைது செய்து, அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Karnataka Insta Love Girl Abused


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->