23 வயது காதலியுடன் லாட்ஜில் மது அருந்திய 19 வயது இளைஞர் காலையில் சடலமாக மீட்பு; காதலியை துருவி துருவி விசாரணை செய்யும் போலீசார்..!
A 19 year old youth who was staying at a lodge with his 23 year old girl friend in Chhattisgarh was found dead this morning
சத்தீஸ்கரில் 23 வயது காதலியுடன் லாட்ஜில் அறை எடுத்து தங்கிய 19 வயது இளைஞர் ஒருவர் மர்மமான முறையில் கடந்த புதன்கிழமை காலை சடலமாகக் மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த வாலிபர் பிலாயின் 'கேம்ப்-1' பகுதியைச் சேர்ந்த ஷதாப் ஷேக் என்று காவல்துறையினர் அடையாளம் கண்டுள்ளனர்.
ஸ்மிருதி நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோஹ்கா பகுதியில் உள்ள 'ஹோட்டல் குனால்' என்ற இடத்தில் இச்சம்பவம் நடந்துள்ளதாகவும், இளைஞரின் உடலை உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்த காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அத்துடன் இது கொலையா? தற்கொலையா? என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.
ஷதாப் மற்றும் அவரது 23 வயது காதலி கடந்த 08-ஆம் தேதி மாலை 06:30 மணியளவில் அந்த லாட்ஜில் அறை எடுத்துத் தங்கியுள்ளதோடு, இருவரும் அறையில் வைத்து மது அருந்தியதாகவும் கூறப்படுகிறது. அப்போது ஷதாப்பிற்கு அவரது முன்னாள் காதலியிடமிருந்து தொலைப்பேசி அழைப்பு வந்ததைத் தொடர்ந்து, தற்போதைய காதலியுடன் வாக்குவாதம் ஏற்பட்டதாகத் தெரிய வந்துள்ளது.

இரவு நேரத்தில் இந்த வாக்குவாதம் தீவிரமடைந்ததால் போதை தலைக்கேறி இருந்த காதலி தனது மணிக்கட்டை அறுத்துக்கொண்டு காயப்படுத்திக்கொண்டதாகவும், பின்னர் மயக்கமடைந்ததாகவும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
அவர் மயக்கத்தில் இருந்தபோது, காதலி இறந்துவிட்டதாக நினைத்து ஷதாப் தனது காதலியின் ஸ்கார்ஃப் துணியைப் பயன்படுத்தி தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
அத்துடன், அது கொலையாகக் கூட இருக்கலாம் என்ற சந்தேகத்தில் இறப்பிற்கான காரணத்தை காவல்துறையினர் விசாரித்து வருகின்ற நிலையில், இன்னும் உறுதிப்படுத்தவில்லை. இருவருக்கும் இடையே வாக்குவாதம் நடந்ததை அறிந்த ஷதாப்பின் நண்பர்கள் சிலர், இரவு 11 மணியளவில் ஹோட்டலுக்கு வந்ததாக ஹோட்டல் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

அவர்கள் அறையின் கதவை பலமுறை தட்டியும் எந்தப் பதிலும் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. ஆனால், மறுநாள் காலை, ஷதாப்பின் காதலி அறையிலிருந்து வெளியே வந்து தூங்கிக்கொண்டிருப்பதாக ஹோட்டல் ஊழியர்களிடம் கூறி விட்டு அங்கிருந்து சென்றுள்ளார். அதன் பின்னர் காலை 09 மணியளவில் ஷதாப்பின் நண்பர்கள் மீண்டும் வந்து அறைக்குள் சென்றனர். அப்போது அவர் எந்த அசைவும் இன்றி கிடந்ததால் அவரை தனியார் மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்றுள்ளனர்.
அங்கு உடலை பரிசோதித்த மருத்துவர்கள் ஷதாப் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த நண்பர்கள் போலீசுக்கு புகார் கொடுத்துள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்து வந்த போலீசார் வந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இந்த விசாரணையின் ஒரு பகுதியாக ஷதாப்பின் காதலியை காவல்துறையினர் விசாரணைக்காகக் காவலில் எடுத்து, ஹோட்டல் அறைக்குள் என்ன நடந்தது என்பதையும், ஷதாப்பின் இறப்புக்கு வழிவகுத்த நிகழ்வுகளையும் கண்டறிய அதிகாரிகள் முயற்சித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
A 19 year old youth who was staying at a lodge with his 23 year old girl friend in Chhattisgarh was found dead this morning