காதலியின் உடலை வெட்டி, குக்கரில் வேகவைத்த கொடூரம்! - Seithipunal
Seithipunal


மும்பையில் 56 வயது நபர் ஒருவர் தன்னுடன் லிவிங் டூ கெதரில் இருந்த பெண்ணை கொலை செய்து, உடல் பாகங்களை சிறு சிறு துண்டுகளாக வெட்டி, குக்கரில் வேகவைத்த நிகழ்வு பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த மே மாதம் ஷர்தா என்ற பெண்ணை அவருடன் இணைந்து வாழ்ந்த அப்ஃதாப் பூனாவாலா என்ற இளைஞர் துண்டு துண்டாக வெட்டி வீசிய சம்பவம் நாட்டையே கதி கலங்க செய்தது. அந்த நிகழ்வுடன் ஒப்பிடும்போது தற்போது மும்பையில் மேலும் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று அரங்கேறி இருக்கிறது.

கீதா நகர் ஃபேஸ் 7ல் மனோஜ் சஹானி என்ற 56 வயது நபர் வசித்து வந்தார். அவருடன் சரஸ்வதி வைத்யா என்ற 36 வயது பெண்ணும் வாழ்ந்து வந்தார். இவர்கள் இருவரும் நீண்ட நாட்களாக லிவிங் டூ கெதரில் வாழ்ந்து வந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு நாள் இவர்கள் வசித்து வந்த வீட்டு அறையின் உள்பக்கம் இருந்து துர்நாற்றத்தை அக்கம் பக்கத்தினர் உணர்ந்து இருக்கிறார்கள்.

பூட்டப்பட்ட வீட்டிலிருந்து அழுகிய நாற்றம் வந்ததால் உடனடியாக காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்த போலீசாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. வீடு முழுவதும் உடல் பாகங்கள் அழுகிய நிலையில் வீசப்பட்டு கருகிக் கொண்டிருந்தது. இந்நிலையில் சந்தேகத்தின் அடிப்படையில் மனோஜ் உட்பட மூவரை போலீசார் கைது செய்து விசாரணை செய்தனர்.

விசாரணையில் மனோஜ் கூறியதாவது; நாங்கள் இருவரும் நீண்ட நாட்களாக லிவிங் டு கெதரில் வாழ்ந்து வந்தோம். இருவருக்கும் ஏற்பட்ட வாய் தகராறில் கோபம் வந்து அவளை கொலை செய்து விட்டேன். அதன் பிறகு என்ன செய்வது என்று தெரியாததால் போலீசாருக்கு பயந்து மரம் அறுக்கும் இயந்திரத்தை வைத்து அவளின் உடலை துண்டு துண்டாக அறுத்து குக்கரில் வேகவைத்து வீசி விட்டேன் இவ்வாறு அவர் கூறினார்.

இந்த கொலைக்கு மனோஜ் மட்டும் தான் காரணமா, இல்லை வேறு யாராவது காரணமா என்று போலீசாரின் தரப்பில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

A Girl Has Assasinated by Her lover


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->