இந்திய சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த ஆந்திர மாநில முதல்வர் சகோதரி.! - Seithipunal
Seithipunal


3800 கிலோமீட்டர் நடைபயணத்தை நிறைவு செய்து ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரி இந்திய சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.

ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரியும், ஒய்எஸ்ஆர் தெலுங்கானா என்ற அரசியல் கட்சியின் தலைவருமான ஒய்எஸ்ஆர் ஷர்மிளா தெலுங்கானா மாநிலத்தில் தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார்.

அதன்படி தெலுங்கானா மாநிலத்தில் ஆட்சியைப் பிடிக்க கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 20ம் தேதி ஹைதராபாத்தில் இருந்து நடைப்பயணத்தை தொடங்கினார்.

அதன்படி தெலுங்கானா மாநிலம் முழுவதும் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதி வாரியாக நடை பயணத்தை மேற்கொண்டார். இந்த நடை பயணத்தின் போது ஷர்மிளா 2 முறை கைது செய்யப்பட்டார். மேலும் நடை பயணத்தை தொடர முடியாத அளவிற்கு பல்வேறு சிரமங்களை சந்தித்தார்.

ஆனாலும் பல்வேறு பிரச்சனைகளை கடந்து சுமார் ஒன்றரை ஆண்டு காலத்தில் 3800 கிலோமீட்டர் பயணித்து தனது நடை பயணத்தை நிறைவு செய்துள்ளார்.

இந்த நிலையில் இருந்த சாதனையை அங்கீகரிக்கும் வகையில், இந்திய சாதனை புத்தகத்தில் ஷர்மிளாவின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. இது குறித்து இந்திய சாதனை புத்தகத்தின் பிரதிநிதிகள் சர்மிளாவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

YSR sharmila register in Indian Book of records


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->