பிரதமராகிய நீங்கள் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்தி விளக்கம் அளிப்பீர்களா? - பிரகாஷ்ராஜ் கேள்வி - Seithipunal
Seithipunal


மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுலின் வீடியோவை பகிர்ந்து, நடிகர் ''பிரகாஷ்ராஜ்'' வாக்கு திருட்டு குறித்து பிரதமர் மோடிக்கு கேள்வி எழுப்பியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டதாவது,"ஒவ்வொரு தேசபக்தரான இந்தியரும் இதைப் பார்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

நாட்டின் ஜனநாயகம் ஆபத்தில் இருக்கிறது. நமது குரல் திருடப்பட்டுள்ளது. இது மிக தீவிர குற்றச்செயல்.மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இவற்றை ஆதாரத்துடன் முன்வைத்துள்ளார்.

முதன்முறை என்றபோதிலும், இம்முறை பிரதமராகிய நீங்கள் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தி விளக்கம் அளிப்பீர்களா?நாடு தெரிந்து கொள்ள விரும்புகிறது" என்று பதிவிட்டுள்ளார்.

இது தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Will you Prime Minister hold press conference and explain Prakash Raj asked


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->