கள்ளக்காதலனுடன் சிக்கிய பெண்., நடு ரோட்டில் மனைவியை நிர்வாணமாக்கிய கணவன்.! பதைபதைக்கும் காணொளி.! - Seithipunal
Seithipunal


குஜராத் மாநிலத்தில், கட்டிய மனைவி வேறு நபருடன் கள்ள உறவு வைத்து, ஊரை விட்டு ஓடிப் போக முயன்றதால், மனைவியை ஊரார் முன்னிலையில் நிர்வாணமாக்கி கடுமையாக அடித்து உதைத்த கணவரை, போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

குஜராத் மாநிலத்தில் கணவன் உள்ளிட்ட சில ஆண்களால் பெண் ஒருவர் நிர்வாணப்படுத்தப்பட்டு தாக்கப்பட்டார். கடந்த ஜூலை 6ஆம் தேதி நடைபெற்ற இந்த சம்பவத்தின் காட்சிகள் இணையதளத்தில் வைரலாக பரவியது.

இந்த காணொளியில், ஒரு பெண் ஒருவர் உடலில் ஆடை இல்லாமல், பல ஆண்களால் அடித்து துன்புறுத்தப்படுகிறார். இந்த காட்சியை அங்கிருந்த சிறுவர்களும், பெண்களும் கூடி நின்று பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்த காணொளியை பார்க்கும் அனைவருக்கும் நெஞ்சம் பதைபதைக்கிறது. இந்த காணொளியின் அடிப்படையில் கான்பூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்தனர்.

விசாரணை செய்ததில் தஹோத் மாவட்டத்தின், தன்பூர் ஊராட்சிக்கு உட்பட்ட காஜூரி என்ற பழங்குடியினர் கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண், தனது கணவன் உள்ளிட்ட ஊர் மக்களால் நிர்வாணப்படுத்தப்பட்டு தாக்கப்பட்டார் என்று தெரியவந்தது.

இதனையடுத்து, அந்த பெண்ணின் கணவரையும், அவருடன் கொடூரமாக தாக்குதலில் ஈடுபட்ட அந்த ஊரைச் சேர்ந்த 18 பேரையும் போலீசார் கைது செய்தனர். காவல்துறையின் முதல்கட்ட விசாரணையில், பாதிக்கப்பட்ட பெண்ணும் அதே கிராமத்தை சேர்ந்த ஒருவருடன் இணைந்து வாழ முடிவு செய்து, அந்த ஊரை விட்டு செல்ல முயன்றுள்ளனர்.

இதனை கேள்விப்பட்ட அந்த பெண்ணின் கணவர், அந்த பெண்ணையும் அவருடன் சென்றவரையும் மடக்கிப் பிடித்து அந்த கிராமத்திற்கு அழைத்து வந்து, பின்னர் அந்தப் அந்த பெண்ணுக்கு தண்டனை கொடுக்கும் விதமாக, நிர்வாணமாக்கி அவரை தாக்கியுள்ளனர் என்று, காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பெண்ணை தாக்கியது, அவமானப்படுத்தியது உள்ளிட்ட பல்வேறு வழக்குகளின் கீழ், அந்த பெண்ணின் கணவர் உள்ளிட்ட 18 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

wife attacked husband ad village people


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->