அதிரடி சரவெடி பேச்சு...! எம்.எல்.ஏ என்றால் யார்...? எப்படி இருக்க வேண்டும்...? - அரசியல் மேடையில் விஜய் விளக்கம் - Seithipunal
Seithipunal


தவெக வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய் தீவிர அரசியல் சாயலில் உரையாற்றினார்.அப்போது அவர் தெரிவித்ததாவது,"மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் எம்.எல்.ஏக்கள் அதிகாரத்தின் முகமாக அல்ல, சேவையின் சின்னமாக இருக்க வேண்டும்.

‘விஜய்க்கு என்ன செல்வாக்கு?’ என கேள்வி எழுப்புபவர்கள் இருக்கலாம். ஆனால், மக்கள் கூட்டம் வாக்காக மாறும் என்பதில் எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது.

அதனால், உங்கள் வாக்கு சிதறாமல், தவெகத்தின் ‘விசில்’ சின்னத்தில் ஒன்றிணைந்து விழ வேண்டும்,” என உற்சாகமாகத் தெரிவித்தார்.மேலும், “இந்த சட்டமன்றத் தேர்தல் உண்மையில் இருமுனைப் போட்டியாக மாறியுள்ளது.

நம்மையும் மு க ஸ்டாலின் தலைமையிலான அணியையும் மையமாகக் கொண்ட இந்தப் போட்டியில், மக்களோடு நேரடியாக இணைந்தவர்களையே நாங்கள் வேட்பாளர்களாக நிறுத்தியுள்ளோம்.

இது சாதாரண தேர்தல் அல்ல; நல்லாட்சி விரும்புவோருக்கும், நாட்டை பாதிக்கும் சக்திகளுக்கும் இடையேயான முக்கியமான மோதல்” என்று தெரிவித்தார்.

இறுதியாக, “ஒரு எம்.எல்.ஏ என்பது வெறும் பதவி அல்ல; அவர் தனது தொகுதியின் காவலராக இருந்து, மக்களின் நலனை காக்கும் பொறுப்பை உணர வேண்டும்” என வலியுறுத்தினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Who MLA How should one be Vijay explanation political stage


கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!




Seithipunal
--> -->