இன்று கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் என்னென்ன? - வானிலை ஆய்வு மையம்
Which districts are likely to receive heavy rain today Meteorological Department
சென்னை வானிலை ஆய்வு மையம் செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது. அதில் குறிப்பிட்டதாவது," தமிழகத்தில் இன்று கோவை, நீலகிரி, தேனி, தென்காசி, மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

தமிழகத்தில் நாளை 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. கோவை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர்,நீலகிரி, தேனி, , திருவண்ணாமலை, சென்னை, தென்காசி, வேலூர் ராணிப்பேட்டை மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வரும் 18-ந்தேதி 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
கோவை, நீலகிரி, வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.வரும் 19, 20 ஆகிய தேதிகளில் கோவை மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரிக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, தேனி, திண்டுக்கல், தென்காசி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.வரும் 20-ந்தேதி தேனி, தென்காசி, ராணிப்பேட்டை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது" என்று தெரிவித்துள்ளது.
English Summary
Which districts are likely to receive heavy rain today Meteorological Department