எனக்கு வேறு என்ன வழி இருக்கிறது? கட்சி உயர் மட்டம் என்ன சொல்லுதோ அதுதான்...! - டி.கே. சிவக்குமார்
What other option do I have Whatever party high command says thats it DK Sivakumar
கடந்த 2023-ம் ஆண்டு, கர்நாடகாவில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில், காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. இதைத் தொடர்ந்து, முதல் மந்திரியை தேர்வு செய்வதில் நீண்ட இழுபறி நீடித்தது. அதன்பிறகு, ஒருவழியாக சித்தராமையா முதல் மந்திரியாக தேர்வு செய்யப்பட்டார்.

மேலும், துணை முதல் மந்திரியாக டி.கே.சிவகுமார் தேர்வு செய்யப்பட்டார்.இருப்பினும், தற்போது சித்தராமையா ஆட்சி 2 ஆண்டு முடிந்துள்ள நிலையில் கர்நாடகாவில் முதல் மந்திரி மாற்றம் பற்றிய பேச்சு சற்று சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.இதனிடையே, கர்நாடக முதல் மந்திரி சித்தராமையா இன்று நிருபர்களைச் சந்தித்தார்.
சித்தராமையா:
அப்போது அவர் தெரிவிக்கையில்,"நாங்கள் ஒற்றுமையாக உள்ளோம். காங்கிரஸ் அரசு 5 ஆண்டுகள் பாறைபோல் உறுதியாக ஆட்சியில் இருக்கும். உங்களுக்கு ஏன் சந்தேகம்? என வினவியுள்ளார்.
டி.கே.சிவகுமார்:
இந்த நிலையில் நிருபர்களைச் சந்தித்த துணை முதல் மந்திரி டி.கே.சிவகுமார் தெரிவிக்கையில்,"எனக்கு என்ன வழி இருக்கிறது? நான் அவருக்கு ஆதரவாக நிற்க வேண்டும். அவரை (சித்தராமையா) ஆதரிக்க வேண்டும். எனக்கு அதில் எந்த ஆட்சேபணையும் இல்லை.
கட்சி உயர்மட்டம் என்ன சொன்னாலும், அது என்ன விரும்பினாலும், அது நிறைவேறும்" என்று தெரிவித்தார்.
English Summary
What other option do I have Whatever party high command says thats it DK Sivakumar