ஒரே அசிங்கமா போச்சு குமாரு! சோறு கூட போடுறோம்...ஓட்டு போட மாட்டோம்...! - பாஜக தொண்டர்
What a shame Kumar We even throw rice we wont vote BJP worker
விருதுநகர் மாவட்டத்தில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், நேற்று மாலை நந்திமரத் தெருவில் பாஜக பூத் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது பூத் கமிட்டி வேலைகள் குறித்து கட்சி நிர்வாகிகளிடம் கேட்டறிந்தார்.அப்போது நயினார் நாகேந்திரனிடம் பேசிய பாஜக தொண்டர் ஒருவர் தெரிவிக்கையில், "நான் தேர்தலில் நின்றேன். உங்களுக்கு சோறு கூட போடுறோம்.
ஆனா ஓட்டுப் போட மாட்டோம்' என மக்கள் சொல்கிறார்கள்.." என்று தெரிவிக்க அங்கிருந்த அனைவரும் வயிறு வலிக்க சிரித்தனர்.
மேலும், வெளிப்படையாக பேசிய பாஜக தொண்டரால் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அதிர்ச்சியடைந்தார்.
English Summary
What a shame Kumar We even throw rice we wont vote BJP worker