தாயின் நீண்ட நாள் ஆசை! 60 வயதில் திருமணம் செய்த பாஜக முன்னாள் தலைவர்!
West Bengal BJP leader marriage
மேற்கு வங்கத்தில் பாஜகவின் முன்னாள் தலைவர் திலீப் கோஷ் தனது 60வது வயதில் திருமணமாகிய செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர், தனது கட்சியைச் சேர்ந்த 51 வயதான ரிங்கு மஜும்தாரை அண்மையில் திருமணம் செய்துகொண்டார்.
இது திலீப் கோஷின் முதல் திருமணம் என்பதும், ரிங்கு மஜும்தாருக்கு இது இரண்டாவது திருமணம் என்பதும் குறிப்பிடத்தக்கது. ரிங்குவுக்கு முன்னதாகவே ஒரு மகன் உள்ளார்.
தங்கள் திருமணத்திற்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜி நேரில் வாழ்த்து தெரிவித்திருக்கிறார். இந்த வரவேற்பும், தம்பதியரின் வயது மற்றும் அரசியல் பின்னணியும், அம்மாநில மக்களிடம் நல்ல அளவில் பேசப்பட்டு வருகிறது.
திருமணத்தைத் தொடர்ந்து பேசிய திலீப் கோஷ், “எனது தனிப்பட்ட முடிவுகள், அரசியல் செயல்பாடுகளில் எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது. இது ஒரு இயல்பான வாழ்க்கைத் தேர்வு. குறிப்பாக என் தாயின் நீண்ட நாள் ஆசை இன்று நிறைவேறியிருக்கிறது. வாழ்த்திய அனைவருக்கும் நன்றி,” என்று தெரிவித்துள்ளார்.
English Summary
West Bengal BJP leader marriage