தமிழ் கொள்கை ஒருபோதும் கைவிடமாட்டோம்! - மொழிப்போர் தியாகிகள் நாளில் ஆதவ் அர்ஜூனா உருக்கமான பதிவு
We never abandon Tamil cause heartfelt post by Adhav Arjuna Language Martyrs Day
“மொழிப்போர் தியாகிகள் நினைவு நாள்: தமிழ்த் பெருமை காப்போம்!”
தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா தனது சமூக வலைதளத்தில் குறிப்பிட்டதாவது,“இந்தி மொழி திணிப்புக்கு எதிராக இறுதி மூச்சுவரை போராடி உயிரை அர்ப்பணித்த நம் மொழிப்போர் வீரர்களை இன்று நாம் நினைவுகூருகிறோம்.

தமிழ் மொழியின் தனித்துவ சிறப்பையும், தமிழ்நாட்டின் இருமொழிக் கொள்கையையும் ஒருபோதும் கைவிடமாட்டோம். எந்த விதமான மொழி திணிப்பு வந்தாலும், அதற்கு ஒருபோதும் சமரசமின்றி எதிர்ப்போம். இந்நாளில், நாம் அதற்கு உறுதியாக நம்பிக்கை தெரிவிக்கிறோம்.
மொழிப்போர் தியாகிகளுக்கு வீர வணக்கம்! வீர வணக்கம்!!”என்று தெரிவித்தார்.
English Summary
We never abandon Tamil cause heartfelt post by Adhav Arjuna Language Martyrs Day