எங்களுக்கு யாருடைய தயவும் தேவையில்லை...! - ஸ்டாலின் விமர்சனத்திற்கு அமைச்சர் ராஜ்மோகன் கடும் தாக்கு...!
We dont need anyone favor Minister Rajmohan strongly attacks Stalin criticism
“தவெக ஆட்சியில் இரண்டே இரண்டுக்குத்தான் போட்டி; ஒன்று மின்வெட்டு, மற்றொன்று அரிவாள் வெட்டு” என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்திருந்த நிலையில், அதற்கு அமைச்சர் ராஜ்மோகன் கடுமையாக பதிலளித்துள்ளார்.இதுதொடர்பாக அமைச்சர் ராஜ்மோகனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு அவர் கூறியதாவது,"நான் இதுவரை பட்டிமன்ற பேச்சாளராக இருந்தேன். தற்போது சட்டமன்றத்தில் பேசத் தொடங்கியிருக்கிறேன். ஆனால், முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தற்போது பட்டிமன்ற பேச்சாளரைப் போல எதுகை, மோனையுடன் பேசிக்கொண்டிருக்கிறார். அந்த போட்டியில்கூட தி.மு.க. இடம்பெறவில்லை.

பெண்கள், வாக்காளர்கள், பொதுமக்கள் மற்றும் சாமானிய மக்களின் ஆதரவில்தான் நாங்கள் ஆட்சி அமைத்துள்ளோம். எதிர்க்கட்சிகளுக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை.கடந்த காலத்தில் 96 இடங்களில் வெற்றி பெற்றபோதுகூட தி.மு.க. ஆட்சி அமைத்தது.
அப்போது யாருடைய தயவில் ஆட்சி அமைந்தது? எங்களுக்கு யாருடைய தயவும் தேவையில்லை. தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றிருந்த கட்சிகளிடம் அக்கட்சி பண்ணையார் மனப்பான்மையுடன் நடந்து கொண்டது.‘ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு’ என்று முதலமைச்சர் கூறியிருந்தார்.
அந்த வாக்குறுதியை அவர் செயல்படுத்தியுள்ளார்.மக்களின் ஆதரவுடன்தான் இந்த ஆட்சி நடைபெற்று வருகிறது. வேறு எந்தக் கட்சியின் தயவிலும் இந்த ஆட்சி இயங்கவில்லை. மக்களின் நம்பிக்கையுடன் இந்த ஆட்சி தொடர்ந்து செயல்படும்” என்று அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.
English Summary
We dont need anyone favor Minister Rajmohan strongly attacks Stalin criticism