சொல்லாமல் கொள்ளாமல் பதவியை பறித்த ஸ்டாலின்.. டிவியை பார்த்து தெரிந்த செய்தி.. முக்கிய நிர்வாகிக்கு அடித்த அதிஷ்டம்.!! - Seithipunal
Seithipunal


திராவிட முன்னேற்ற கழகத்தின் துணைப்பொதுச்செயலாளர் பதவியில் இருந்து வி.பி.துரைசாமியை விடுவித்து திமுக தலைமை அறிவித்துள்ளது. 

மேலும், திமுக துணை பொதுச்செயலாளராக எம்.பி. அந்தியூர் ப.செல்வராஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இது குறித்த அறிவிப்பை திராவிட முன்னேற்ற கழக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து வி.பி.துரைசாமி கூறுகையில்,  என் பதவி பறிப்பை தொலைக்காட்சியில் பார்த்து தான் தெரிந்துகொண்டேன். பதவி பறிப்பு செய்தி எனக்கு எந்தவித ஆச்சர்யமும் அளிக்கவில்லை. கருணாநிதி, பேராசிரியர் அன்பழகன், ஸ்டாலினுக்கு நன்றி என கூறினார்.

பதவி பறிப்பு ஆச்சரியப்படுவதற்கில்லை. என்ன தவறு செய்தேன்? என்று விளக்கம் கேட்கப்படவில்லை. பாஜக தலைவர் முருகனுடனான சந்திப்பு பற்றி திமுக தலைமைக்கு விளக்கம் கொடுப்பேன். நான் அளிக்கும் விளக்கத்தை ஏற்பதும், ஏற்காததும் தலைமையின் முடிவு ஆகும்.

திமுகவில் நான் ஒரு சாதாரண தொண்டன், தலைமைக்கு எதிராக என்னால் எதுவும் செய்ய முடியாது. ஒரு வேளை என் மீது நடவடிக்கை எடுத்தால் அதை நான் ஏற்றுக்கொண்டு தான் ஆக வேண்டும் என விபி துரைசாமி கூறினார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vp duraisamy says about dmk post


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தற்போது வழங்கப்பட்டுள்ள தளர்வுகள்..
கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தற்போது வழங்கப்பட்டுள்ள தளர்வுகள்..
Seithipunal