'வாக்குப்பதிவு சதவிகிதம் உயரவே இல்லை...! - தேர்தல் ஆணையத்தின் புள்ளிவிவரங்களை அதிரடியாக விமர்சித்த திருமாவளவன்...! - Seithipunal
Seithipunal


விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், சமீபத்திய அரசியல் சூழ்நிலைகள் மற்றும் சட்டமன்றத் தேர்தல் குறித்து செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்டு பேசினார்.

அவரது பேச்சு அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது.அவர் தெரிவித்ததாவது,“தமிழக சட்டமன்றத் தேர்தலில் நடைபெற்ற வாக்குப்பதிவு வழக்கமான அளவிலேயே உள்ளது. இதில் ஆச்சரியப்படத்தக்க விசேஷம் எதுவும் இல்லை.

ஆனால் எஸ்.ஐ.ஆர். செயல்முறையின் மூலம் பல லட்சக்கணக்கான வாக்குகள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. அவை நீக்கப்படாமல் இருந்திருந்தால், இந்த வாக்குப்பதிவு சதவீதம் பழைய நிலையை பிரதிபலித்திருக்கும்.

இப்போது, அந்த வாக்குகள் நீக்கப்பட்டதால், பதிவான வாக்கு சதவீதம் அதிகரித்தது போல தோற்றமளிக்கிறது. ஆனால் அது உண்மையான உயர்வு அல்ல. ஒவ்வொரு தேர்தலிலும் இயல்பாகவே புதிய வாக்காளர்கள் இணைவார்கள்.

அதுபோல, இந்த முறை சுமார் 20 முதல் 25 லட்சம் புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். அதுவே இந்த எண்ணிக்கையில் மாற்றத்தை உருவாக்கியுள்ளது.

எனவே, இந்த தேர்தலின் முடிவில் மீண்டும் தி.மு.க. தலைமையிலான ஆட்சி அமைவது உறுதி. மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி இந்த முறை மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்யும்” என்று அவர் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

voting percentage not increased at all Thirumavalavan sharply criticized Election Commission statistics


கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?



Advertisement

கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?




Seithipunal
--> -->