கோவை வடக்கு தொகுதி: தேர்தல் பணியாளர்களுக்கு பிரியாணி வழங்கியதால் சர்ச்சை!
kovai vadakku election issue
கோவை வடக்கு சட்டப்பேரவைத் தொகுதியில் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு பிரியாணி உள்ளிட்ட உணவுகள் வழங்கப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கணபதி அரசு மேல்நிலைப் பள்ளி, மணியகாரம்பாளையம் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி உள்ளிட்ட பல வாக்குச்சாவடிகளில் பணிபுரிந்த அதிகாரிகள் முதல் பணியாளர்கள் வரை அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தேர்தல் நாளுக்கு முந்தைய இரவும், தேர்தல் நாள் முழுவதும் காலை, மதியம், இரவு ஆகிய நேரங்களிலும் உணவு மற்றும் சிற்றுண்டிகள் பரிமாறப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த ஏற்பாடுகளை திமுகவினர் மேற்கொண்டதாகவும், அதற்காக அதிகாரிகள் அல்லது பணியாளர்களிடமிருந்து எந்த தொகையும் பெறப்படவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விவகாரம் குறித்து வடக்கு தொகுதியைச் சேர்ந்த சுயேச்சை வேட்பாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, சம்பவம் குறித்து தொடர்புடைய தேர்தல் அதிகாரி விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
தேர்தல் நேரத்தில் இத்தகைய செயல்கள் விதிமுறைகளுக்கு முரணா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், இந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
kovai vadakku election issue