ஆதார் எண்ணையும், வாக்காளர் அட்டையையும் இணைக்க எளிய வழி.! அட இது தெரியாம போய்டுச்சே நமக்கு.! - Seithipunal
Seithipunal


நடப்பு குளிர்காலக் கூட்டத் தொடரில் வாக்காளர் அடையாள அட்டையை, ஆதார் எண்ணுடன் இணைக்கும் முறையை சட்டமாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

தற்போதுவரை வாக்காளர் அட்டையை ஆதார் அட்டையுடன் இணைப்பதைத் தேர்தல் ஆணையம் கட்டாயமாக்கவில்லை. ஆனால், தனிநபர் விருப்பத்தின் அடிப்படையில், ஆதார் எண்ணையும், வாக்காளர் அட்டையையும் இணைக்கலாம்.

இதனை எப்படி செய்வது?

முதலில், Visit https://voterportal.eci.gov.in/ என்ற இணையதள்தில் லாக் இன் செய்ய வேண்டும். 

அதன்படி, உங்களின் மொபைல் எண் அல்லது மின்னஞ்சல் அல்லது வாக்காளர் எண் பதிவு செய்ய வேண்டும்.

பின்னர் எந்த மாநிலம், மாவட்டம், தனிப்பட்ட விவரங்களான பெயர், பிறந்த தேதி, தந்தை பெயரைக் குறிப்பிட வேண்டும்

மேல்சொன்ன விவரங்களைப் பதிவு செய்தபின், அருகில் உள்ள சர்ச் பட்டனை க்ளிக் செய்ய வேண்டும்.  நீங்கள் பதிவிட்ட விவரங்கள் அரசின் டேட்டாபேஸில் பொருத்தமாக இருந்தால் அவை திரையில் தெரியவரும்.

இதனை தொடர்ந்து ஆதார் எண்ணைப் பதிவிடுங்கள் என்ற கட்டம் திரையின் இடது பக்கத்தில் தெரியும். அதனை க்ளிக் செய்தால், ஒரு சிறிய திரை உருவாகும். 

அதில், ஆதார் அட்டையில் குறிப்பிட்டுள்ளபடி உங்கள் பெயர், ஆதார் எண், வாக்காளர் அடையாள எண், மொபைல் எண், மின்னஞ்சல் முகவரியைக் பதிவிட வேண்டும்.

இறுதியாக சப்மிட் பட்டனை அழுத்த வேண்டும். உடனடியாக திரையில் உங்கள் விண்ணப்பம் வெற்றிகரமாகப் பதிவு செய்யப்பட்டது என்ற தகவல் வரும். அவ்வளவு தான் உங்கள் ஆதார் எண்ணையும், வாக்காளர் அட்டையையும் நீங்கள் இணைத்து விட்டீர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

VOTER ID AND AADHAR NUMBER JOINT


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->