நெகிழ்ச்சி பதிவு!மாற்றுத்திறனாளிகளின் குரல்கள் உள்ளாட்சி மன்றங்களில் இனி ஒலிக்கும்! - முதலமைச்சர்
voices differently abled heard local government councils chief minister
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழக சட்டசபையில் இன்று உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு கவுன்சிலர் பதவி வழங்கும் சட்டமுன்வடிவை தாக்கல் செய்தார்.

இதுகுறித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் நெகிழ்ச்சிமிக்க பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில் அவர் பதிவிட்டிருப்பதாவது,"வாழ்வில் ஓர் பொன்னாள், இந்நாள்!
தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் கிராம ஊராட்சிகளிலும் மாற்றுத்திறனாளிகள் பிரதிநிதித்துவத்தை உறுதிசெய்யும் உன்னதச் சட்டத்தை இன்று சட்டமன்றத்தில் முன்மொழிந்தேன்!
12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளின் குரல்கள் உள்ளாட்சி மன்றங்களில் இனி ஒலிக்கும்! இதுதான் திராவிட மாடல்" எனத் தெரிவித்துள்ளார்.
இது தற்போது பாராட்டுக்குரிய விஷயமாக மக்களிடையே நிலவுகிறது. இதனால் பல கட்சியனரிடமிருந்தும் பாராட்டுகளை பெற்று வருகிறார் நம் முதல்வர்.
English Summary
voices differently abled heard local government councils chief minister