தெருவுக்கு தெரு டாஸ்மாக் கடை! 4 பேர் படுகொலைக்கு தமிழக அரசே காரணம்! விஜயகாந்த் குற்றச்சாட்டு! - Seithipunal
Seithipunal


திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த கள்ளிக்கிணறு பகுதியில் நேற்று இரவு மது அருந்தி கொண்டிருந்த மூவரை தட்டி கேட்டதால் பாஜக பிரமுகர் மோகன்ராஜ் மற்றும் அவருடைய தாய், சகோதரர், சித்தி உள்ளிட்ட 4 பேரை அந்த கும்பல் வெட்டி படுகொலை செய்தது.

தமிழகத்தையே உலுக்கிய இந்த சம்பவத்தில் தொடர்புடைய செல்லமுத்து என்பவரை போலீசார் இன்று குண்டம் பகுதியில் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர் திருச்சி மாவட்டம் மணப்பாறையை சேர்ந்தவர் என்பது விசாரணையில் தெரியவந்தது.

மது அருந்தியவரை தட்டி கேட்டதால் 4 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் "திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த கள்ளிக் கிணறு பகுதியில் போதை ஆசாமிகளால் ஒரு குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை கேட்டு அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.

குடியிருப்பு பகுதியில் மது அருந்துவதை தட்டி கேட்டதால் மறுமணம் நபர்கள் நான்கு பேரை கொடூரமாக கொலை செய்துள்ளனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். 

இது போன்ற குற்றச்சம்பவங்கள் நடைபெறுவதற்கு தெற்கு தெரு டாஸ்மாக் கடைகளை திறந்து வைத்திருப்பதே காரணம். டாஸ்மாக் கடைகளை மூடாமல் குற்றங்கள் பெருகுவதற்கு காரணமாக இருக்கும் தமிழக அரசை வன்மையாக கண்டிக்கிறேன். சட்டம் ஒழுங்கை காப்பாற்றவும் மக்களை பாதுகாக்கவும் தமிழக அரசு தவறிவிட்டது. தூக்கத்திலிருந்து இந்த அரசு விழித்துக் கொள்ள வேண்டும்.

மக்களுக்கான ஆட்சியாக இந்த ஆட்சி இருக்க வேண்டும். இது போன்ற குற்றங்களை இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும். நான்கு பேர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும். மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு சார்பில் உரிய நிதி உதவி வழங்க வேண்டும்" என தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Vijayakanth blamed TNgovt tasmac was reason for Palladam murder


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->