கரூர் துயரத்தில் விஜய்...! காயமடைந்தோருக்கு ரூ.2 லட்சம், உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ரூ.20 லட்சம்
Vijay Karurs grief Rs 2 lakhs injured Rs 20 lakhs families deceased
த.வெ.க. தலைவர் விஜய், கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா ரூ.20 லட்சம் மற்றும் காயமடைந்தோருக்கு தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டதாவது,"கரூரில் நிகழ்ந்த துயரச் சம்பவம் என் மனதைச் சிதறடித்துவிட்டது. நம் உயிர்களை இழந்து தவிக்கும் குடும்பங்களின் துயரை வார்த்தைகளால் சொல்ல இயலாது. அந்த குடும்பங்களுக்கு நான் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

உங்களின் உறவினனாக, ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா ₹20 லட்சமும், காயமடைந்தோருக்கு தலா ₹2 லட்சமும் வழங்குகிறேன். இழப்பிற்கு ஈடு செய்ய இயலாது என்பதறிந்தும், இந்த கடின தருணத்தில் உங்களுடன் நின்று உதவுவது என் கடமை" என்று தெரிவித்துள்ளார்.
மேலும், காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன் என்றும், அவர்களின் சிகிச்சைக்கு தேவையான அனைத்து உதவிகளையும் தமிழக வெற்றிக் கழகம் செய்து தரும் என்றும் விஜய் உறுதியளித்துள்ளார்.
English Summary
Vijay Karurs grief Rs 2 lakhs injured Rs 20 lakhs families deceased