தமிழ்நாட்டை அதிர்ச்சியில் ஆழ்த்திய கரூர் கூட்ட நெரிசல்!- அரசு, காவல், நீதிமன்ற நடவடிக்கை தொடக்கம்
Karur stampede shocks Tamil Nadu Government police court action initiated
கரூர் வேலுச்சாமிபுரத்தில் த.வெ.க. தலைவர் விஜய் நடத்திய பிரசாரத்தின் போது, அவர் பேசி புறப்பட்ட பின்னர் கூட்டம் கலைந்து செல்லும்போது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 100-க்கும் மேற்பட்டோர் மயங்கியதால் உடனடியாக அவசர ஊர்தி மூலம் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இந்த பேரதிர்ச்சி சம்பவத்தில் 40 பேர் உயிரிழந்தனர், மேலும் பலர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பெறுகின்றனர்.கரூரில் ஏற்பட்ட இந்த துயர சம்பவம் தமிழ்நாட்டை முழுவதுமாக அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மேலும், உயிரிழந்தோரின் குடும்பங்களுடன் பல்வேறு அரசியல் தலைவர்கள் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்துள்ளனர்.இந்த சம்பவ தொடர்பாக, ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
மேலும், கூட்டநெரிசல் இடத்திற்கு ஏ.டி.ஜி.பி. தேவாசீர்வாதம் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார்.இதனிடையே, கரூர் கூட்டநெரிசல் சம்பவம் தொடர்பாக காவல்துறை விசாரணையும் தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, சம்பவத்துக்கான முழுமையான விசாரணை நடைபெற்று வருகிறது என்று அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளனர்.
English Summary
Karur stampede shocks Tamil Nadu Government police court action initiated