தமிழ்நாட்டை உலுக்கிய கரூர் சம்பவம்! -உயிரிழப்பு எண்ணிக்கை 40 ஆக உயர்ந்தது
Karur incident shakes Tamil Nadu Death toll rises to 40
கரூர் வேலுசாமிபுரத்தில் த.வெ.க. தலைவர் விஜய் நடத்திய பிரசார கூட்டம் பேரதிர்ச்சியான சோகமாக மாறியது. இந்தக் கூட்ட நெரிசலில் சிக்கி 8 குழந்தைகள் உட்பட 39 பேர் உயிரிழந்த இந்த துயரச் சம்பவம், தமிழ்நாட்டையே உலுக்கி விட்டது.இந்த சோக நிகழ்வை அடுத்து, அரசியல் மற்றும் சினிமா உலகத்தினர் பலரும் தங்களது இரங்கல்களையும் கண்டனங்களையும் தொடர் பதிவுகளாக வெளியிட்டு வருகின்றனர்.

மேலும் இந்த கூட்டத்தில் காயமடைந்தவர்கள் முதலில் அருகிலுள்ள தனியார் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்ட பின்னர், அவர்களில் பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்ததால் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு அவசரமாக மாற்றப்பட்டனர்.
தற்போது அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.முதற்கட்ட தகவலின்படி 39 பேர் உயிரிழந்ததாக உறுதி செய்யப்பட்டது. எனினும் சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒருவரின் உயிரிழப்பால் பலி எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது. இதில் 10 குழந்தைகள், 17 பெண்கள் மற்றும் 13 ஆண்கள் உயிரிழந்துள்ளனர் என்பது மிகுந்த வேதனையளிக்கிறது.
English Summary
Karur incident shakes Tamil Nadu Death toll rises to 40