கரூர் கூட்ட நெரிசல்: 39 பேர் உயிரிழப்பு!-சிபிஐ விசாரணைக்கு நீதிமன்ற உத்தரவு
Karur stampede 39 people killed Court orders CBI probe
கரூர் வேலுச்சாமிபுரத்தில் நேற்று நடந்த தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் நடத்திய பிரசாரத்தில், இரவு 7 மணியளவில் திடீர் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 10 குழந்தைகள், 17 பெண்கள், 12 ஆண்கள் உட்பட மொத்தம் 39 பேர் உயிரிழந்தனர்.

இந்த பேரதிர்ச்சி சம்பவம் நாடு முழுவதையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.இதன் பின்னணி நடவடிக்கையாக, சென்னை உயர்நீதிமன்றம் நீதிபதி தண்டபானி வீட்டு முன்பு, தமிழக வெற்றிக் கழக வழக்கறிஞர் பிரிவு நிர்வாகிகள் வந்து, கரூர் கூட்ட நெரிசல் திட்டமிடப்பட்ட சதி காரணமாக சிபிஐ அல்லது சிறப்பு புலனாய்வுக் குழுவின் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று முறையிட்டனர்.
மேலும் நீதிபதி தெரிவித்ததற்கேற்ப, கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான தவெகவின் முறையீடு மதுரை கிளை உயர்நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு முன்னெடுக்கப்படுகிறது, இது நாளை மதியம் 2.15 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Karur stampede 39 people killed Court orders CBI probe