விஜய்யை பாஜக தான் இயக்குகிறது – டெல்லி பின்புலம் இருக்கும் தைரியத்தில் தான் இந்த அகந்தையில் பேசுகிறார்!சபாநாயகர் அப்பாவு குற்றச்சாட்டு!
Vijay is being run by BJP he speaks with this arrogance only with the courage of his Delhi background Speaker Appavu accuses
தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு, தவெக (தளபதி விஜய் மக்கள் இயக்கம்) தலைவர் விஜய்யை பாஜக தான் இயக்குகிறது என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.
நெல்லையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,“விஜய்க்கு அரசியல் அடிப்படைத் தெரியவில்லை. சினிமாவில் பேசுவது போல டயலாக் அடிக்கிறார். ‘சிஎம் அங்கிள்’, ‘சிஎம் சார்’ என்று பேசுவது அகந்தையாக இருக்கிறது. அந்த அகந்தைக்கு பின்புலமாக பாஜக ஆதரவு தான் காரணம் என பலர் கூறுகிறார்கள்” என்றார்.
மேலும் அவர்,“தவெகவின் பொதுச்செயலாளர் டெல்லிக்குச் சென்று அமித் ஷா சொன்னதற்குப் பிறகுதான் கட்சி ஆரம்பிக்கப்பட்டது. பத்திரிகைகளே இதை வெளிப்படுத்தியுள்ளன. விஜய்க்கு OY பாதுகாப்பு கேட்காமலேயே வழங்கப்பட்டது. தனி விமான வசதியும் மத்திய அரசு கொடுத்ததாக கூறப்படுகிறது. இது எல்லாம் அவரை பாஜக இயக்குகிறது என்பதற்கான சான்றுகள்” என்று குற்றம்சாட்டினார்.
அப்பாவு மேலும்,“பிரதமர், உள்துறை அமைச்சர், முதலமைச்சர் போன்ற உயர்ந்த பதவியிலுள்ளவர்களைப் பற்றி பேசும்போது, மரியாதை குறையாமல் ‘மாண்புமிகு’ என்று சொல்ல வேண்டும். சினிமா ஸ்டைல் பேச்சை மக்கள் விரும்பமாட்டார்கள்” என எச்சரித்தார்.அதேவேளை, மத்திய அரசு தமிழகத்தை வஞ்சித்து வருவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
“மகாராஷ்டிரா மும்மொழிக் கொள்கையை ஏற்கவில்லை. இருந்தும் மத்திய அரசு அங்கு கல்வி நிதி வழங்கியுள்ளது. ஆனால் தமிழ்நாட்டுக்கு அதே உரிமையை மறுக்கிறது. கல்வி, பொருளாதாரத்தில் முன்னேறிய தமிழகத்திற்கு நெருக்கடி கொடுக்கும் விதத்தில் மத்திய அரசு செயல்படுகிறது” என சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.
English Summary
Vijay is being run by BJP he speaks with this arrogance only with the courage of his Delhi background Speaker Appavu accuses