அதிமுக ‘ஊழல் சக்தி’ என்ற விஜய்… ‘நன்றிக்கடன் மறந்தார்’ என அதிமுக பதிலடி...! - Seithipunal
Seithipunal


தமிழக அரசியலில் நடிகர் விஜயின் பேச்சுகள் மீண்டும் தீப்பொறி தூவியுள்ளன. திமுகவை “தீய சக்தி” என்று தொடர்ந்து விமர்சித்து வந்த அவர், இப்போது அதிமுகவையும் “ஊழல் சக்தி” என நேரடியாக குறிவைத்தது அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

இந்த கடுமையான தாக்குதலால் அதிமுக தலைவர்கள் திடுக்கிட்டு, ஒருவருக்கு ஒருவர் பதிலடி கொடுத்து வருகிறார்கள். அந்த வரிசையில் தூத்துக்குடியில் நடைபெற்ற கட்சிக் கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ, விஜயை கடுமையாக விமர்சித்தார்.

“விஜயின் ‘வெற்றிக் கழகம்’ அல்ல, அது ‘வெற்றுக் கழகம்’ தான். உண்மையான வெற்றிக்கழகம் அதிமுகதான்,” என்று தாக்கமாக பேசிய அவர், பழைய சம்பவத்தையும் நினைவுபடுத்தினார்.

‘மெர்சல்’ திரைப்படம் சர்ச்சையில் சிக்கியபோது, விஜய் தன்னை நேரில் சந்தித்து உதவி கேட்டதாகவும், அதிமுக ஆட்சியில் அந்த பிரச்சனை ஒரே இரவில் தீர்க்கப்பட்டதாகவும் கூறினார்.

“அப்போது வாழ்நாள் முழுக்க நன்றிக்கடன் பட்டிருப்பேன் என்றவர், இன்று அதிமுக பெயரை கூட சொல்ல தயங்குகிறார்,” என்று கடம்பூர் ராஜூ சாடியதால், அரசியல் மேடையில் புதிய வார்த்தைப் போர் வெடித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Vijay calls AIADMK corrupt force AIADMK retaliates saying he forgot his debt gratitude


கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?



Advertisement

கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?




Seithipunal
--> -->