கலவர வழக்கு! நேரில் ஆஜராகும் திருமாவளவன்! - Seithipunal
Seithipunal


கடந்த 2003 ஆம் ஆண்டு, நவம்பர் மாதம், மதமாற்ற தடைச் சட்டத்திற்கு எதிராக விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக மயிலாடுதுறை பகுதியில், பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. 

காவல்துறை அனுமதி உடன் மயிலாடுதுறை ரயிலடி பகுதியில் இருந்து திருமாவளவன் தலைமையில் இந்த பேரணி நடைபெற்றது. அப்போது காமராஜர் சாலை வழியாக செல்வதற்கு பதிலாக, காந்திஜி சாலை வழியாக இந்த பேரணி நடக்க முயன்றது. 

இதனை அடுத்து போலீசார் திருமாவளவன் உள்ளிட்ட விடுதலை சிறுத்தை கட்சியினரை தடுத்து நிறுத்தினர். இதன் காரணமாக போலீஸாருக்கும் விடுதலை சிறுத்தை கட்சியினருக்கும் இடையே மோதல் வெடித்து, கலவரமாக மாறியது. 

இதில் பொது சொத்துக்களும் சூறையாடப்பட்டன. இதனை அடுத்து மயிலாடுதுறை காவல் ஆய்வாளர் அளித்த புகாரின் பேரில், திருமாளவன் உள்ளிட்டவர்கள் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

இந்த வழக்கு மயிலாடுதுறை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், இன்று வழக்கின் விசாரணைக்காக திருமாவலவன் நேரில் ஆஜராக உள்ளார். 

 

இதற்கிடையே திமுக எம்பி தயாநிதிமாறன் தொடர்ந்த அவதூறு வழக்கில், சென்னை எழும்பூர் நீதிமன்ற சிறப்பு நீதிமன்றத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நேரில் ஆஜராகி உள்ளார்.

கடந்த மக்களவைத் தேர்தலின் போது தேர்தல் பிரச்சாரத்தின் போது திமுக எம்பி தயாநிதி மாறன் தொகுதிக்கு ஒதுக்கப்பட்ட நிதியை முழுமையாக செலவு செய்யவில்லை என்று தெரிவித்திருந்த நிலையில், இது உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டு என்று கூறி, தயாநிதி மாறன் தொடர்ந்த வழக்கில் இன்று எடப்பாடி பழனிச்சாமி நேரில் ஆகிற ஆகி உள்ளார் ஆஜராகி உள்ளார்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

VCK Thirumavalavan Mayiladurai Court


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->