அத்துமீறு என்பது வன்முறை அல்ல... திருமாவளவன் புது விளக்கம்!
VCK thirumavalavan caste politics
சென்னையில் நடைபெற்ற ‘ஆறு அறிவு’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விசிக தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டு, இசைத்தட்டையை வெளியிட்டார். இயக்குனர் பாக்கியராஜ் அந்த இசைத்தட்டையை பெற்றுக்கொண்டார்.
விழாவில் பேசிய திருமாவளவன், தன்னை குறிவைத்து இணையத்தில் வெளியாகியுள்ள விமர்சனங்களுக்கு பதிலளித்தார். “அடங்க மறு, அத்து மீறு” என்ற சொற்களை வன்முறைக்கு ஊக்கமளிப்பதாக சிலர் தவறாகப் புரிந்து விமர்சிக்கின்றனர். ஆனால், இந்த சொற்களின் உண்மையான பொருள் அடக்குமுறைக்கு எதிராக எழும் எதிர்ப்பே, அது வன்முறை அல்ல என்று விளக்கமளித்தார்.
அடங்க மறு என்பது அடக்குமுறைக்கு எதிராக எழுந்து நிற்பதையும், அத்து மீறு என்பது அநியாயத்துக்கு எதிராக பேசுவதையும் குறிக்கிறது. இதை தவறாக விளக்கி, வன்முறை என குற்றம்சாட்டுவது ஆதிக்க சாதி மனநிலையின் வெளிப்பாடு என அவர் கடுமையாக விமர்சித்தார்.
திருமாவளவன் மேலும் கூறியதாவது: “சமூகத்தில் ஒடுக்கப்பட்டோர் தங்களது உரிமைக்காக குரல் கொடுக்கும்போது அதை வன்முறை என்று அழைப்பது தவறு. அதேபோல் அதிகாரத்தில் இருப்பவர்கள் செய்கிற அடக்குமுறைதான் உண்மையான வன்முறை. இதை புரிந்துகொள்வது முக்கியம்” என்றார்.
English Summary
VCK thirumavalavan caste politics