அதிமுகவிற்கு அழைப்பு விடுத்த திருமாவளவன்! திமுகவின் உடனடி ரியாக்ஷன்?!  - Seithipunal
Seithipunal


முழு மதுவிலக்கை வலியுறுத்தி விசிக சார்பில் அக்டோபர் 2ம் தேதி கள்ளக்குறிச்சியில் நடைபெறவுள்ள மாநாடு நடைபெற உள்ளது.

இந்த மதுவிலக்கை வலியுறுத்தி நடைபெறவுள்ள மாநாடு குறித்து அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் தெரிவிக்கையில், "“நல்லச்சாராயத்தால் கள்ளச்சாராயத்தை தடுக்க முடியும் என்கிற வாதம் ஏற்புடையதல்ல.. சாராயம் என்றாலே அது கேடுதான்.

மது ஒழிப்பில் உடன்பாடுள்ள அனைவரும் ஒரே மேடையில் நிற்க வேண்டிய தேவை இருக்கிறது. எந்தக் கட்சியும் வரலாம், அதிமுகவும் வரலாம்.

ஜனநாயக காட்சிகள் அனைத்தும் இந்த மாநாட்டில் பங்கேற்கலாம். நாடு முழுவதும் மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம்" என்று திருமாவளவன் தெரிவித்தார்.

திருமாவளவனின் இந்த அழைப்பு குறித்து திமுக நிர்வாகி கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், இதனால் திமுகவிற்கு எந்த நெருக்கடியும் கிடையாது.

எங்களுடன் அவர்கள் கூட்டணியில் இருப்பதால் போராட்டம், மாநாடு நடத்த கூடாது என்று இல்லை. திமுகவை போயிருத்தவர் கூட்டணி கட்சிகளை கட்டுப்படுத்த மாட்டோம் என்று தெரிவித்துள்ளார். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

VCK Thirumavalavan ADMK Call DMK Reaction


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->