அடங்கமறு., அத்துமீறு., அண்ணா அறிவாலயத்தை அடித்து நொறுக்கு.! ஸ்டாலினுக்கு பாடம் புகட்டப்போவதாக விசிக சூளுரை.! - Seithipunal
Seithipunal


திமுகவின் கூட்டணியில் இடம்பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி வரும் சட்டமன்ற தேர்தலில் திமுகவுடன் கூட்டணி வைக்க ஆயத்தமாகி வருகிறது. 

இந்நிலையில், நேற்று விசிக-வின் தலைவர் திருமாவளவன் மற்றும் முக்கிய நிர்வாகிகள் கூட்டணி தொகுதி உடன்பாடு தொடர்பாகவும், ஸ்டாலின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவிக்கவும், அண்ணா அறிவாலயத்திற்கு நேரில் சென்றனர்.

அப்போது திருமாவளவன் மற்றும் நிர்வாகிகளை அறிவாலயத்திற்குள் உள்ளே நுழைய விடாமல் முதலில் தடுத்ததாக கூறப்படுகிறது. வெகு நேரம் ஆகியும் உள்ளே விடாமல் காக்கவைத்துள்ளதாகவும் தெரிகிறது.

இதனால் திருமாவளவன் ஒரு ஓரத்தில் அமரும் நிலை ஏற்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. இதனை கண்டு பொறுமை இழந்து., அடங்கமறு., அத்துமீறு., எனும் பாணியில், எங்களது வாக்குகளை பெற்றுக்கொண்டு எங்கள் தலைவரையே காக்கவைக்கிறீர்களா என்று ஆவேசமாக குரல் எழுப்பிய விசிக நிர்வாகிகள், அண்ணா அறிவாலயத்தின் முகப்பு கண்ணாடிகளை அடித்து உடைத்தனர்.

எங்களுடன் கூட்டணி வைத்து தமிழகம் முழுவதும் எங்கள் சமுதாய வாக்குகளை பெற்று., எங்களையே வெளியில் நிற்க வைக்கும் ஸ்டாலினே., உனக்கு இந்த தேர்தலில் சரியான பாடத்தை புகட்டுவோம் என்று விசிகவினர் கோஷமிட்டதாக சொல்லப்படுகிறது.

சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் சமாதானம் செய்ய, அப்போது ஸ்டாலினிடம் இருந்து திருமாவளவுனுக்கு அழைப்பு வர. உடனே திருமாவளவன் உள்ளே சென்று ஸ்டாலினிடம் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துவிட்டு புறப்பட்டார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

VCK stunt in anna arivalayam


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->