விசிலடிச்சான் குஞ்சுகள்... விசிலடித்த விஜயை விமர்சித்த விசிக!
VCK Slam tvk vijay
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வன்னி அரசு விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "சனநாயகப்போர் என்கிறார் விஜய் அவர்கள்.
முதலில் ஜனநாயகன் திரைப்படம் வெளிவருவதற்கான போரை நடத்தட்டும்.
தயாரிப்பாளர்கள் பல கோடி ரூபாயை முதலீடு போட்டு முடங்கிப்போயிருக்கிறார்கள்.
இந்த முடக்கத்துக்கு பின்னிருப்பது தணிக்கைத்துறை மட்டுல்ல; பாஜக தான் என்பதை சொல்ல துணிவற்றவர் தான் நடிகர் விஜய்.
சிபிஐ விசாரணைக்கு பிறகு
“எந்த அழுத்தமும் இல்லை;
அடங்கிப்போற ஆளு இல்லை”
என தமது ரசிகர்களிடம், சொல்வதற்காகத்தான் இந்த பேச்சு அமைந்துள்ளது.
இறுதியாக விஜய் அவர்கள் விசிலடித்தது மட்டும் ரசிக்கும்படியாக இருந்தது. விசிலடிச்சான் குஞ்சுகள்" என்று விமர்சித்துள்ளார்.