ஆளூர் ஷா நவாஸுக்கு இப்போது ஏன் இந்துக் கடவுள்கள் மேல் திடீர் பாசம்? வேடதாரிகளை நம்பாதீர்கள் - எச்சரிக்கும் பாஜக!
VCK Shanavas TN BJP Hindu Election 2026
தமிழக பாஜக விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "வேடதாரிகளை நம்பாதீர்கள்! "நிற்பதும் நடப்பதும் நின் செயலாலே, நினைப்பதும் நிகழ்வதும் நின் செயலாலே... கந்தனே உனை மறவேன்..!" என்று மேடையில் முருகப்பெருமான் மேல் மனமுருகி ஆளூர் ஷா நவாஸ் அவர்கள் பாடுவதை வரவேற்கிறோம்!
ஆனால், இதே ஆளூர் ஷாநவாஸ் நமது தனிப்பெரும் பண்டிகையான பொங்கலன்று உழவின் மேன்மையைப் போற்றும் விதமாக சூரியனை வழிபடுவதையும், மாடுகளை வணங்கி தங்கள் முறைப்படி சடங்குகளைச் செய்வதையும் தவறென்று பேசி பிரிவினையை உண்டு செய்தார் என்பதை மறந்துவிட முடியுமா?
அல்லது, அயோத்தி ராமர் கோயில் தீர்ப்பை எழுதிய நீதிபதி இந்தியாவில் உயிரோடு எப்படி வாழ முடியும் என்று வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியதைத் தான் மறந்துவிட முடியுமா?
ஆக, இப்போது ஏன் இந்துக் கடவுள்கள் மேல் திடீர் பாசம்? தேர்தல் வந்துவிட்டது, இந்து விரோத இண்டி கூட்டணிக்கு அச்சம் வந்துவிட்டது, அதுதானே? என்று தெரிவித்துள்ளார்.
English Summary
VCK Shanavas TN BJP Hindu Election 2026