மணிப்பூர் விவகாரம் .. வரும் ஜூலை 24-ஆம் தேதி விசிக சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம்.! - Seithipunal
Seithipunal


மணிப்பூர் விவகாரத்தில் அம்மாநில முதல்வரை கைது செய்ய வலியுறுத்தியும், பதவி விலகக் கோரியும் விசிக சார்பில் வரும் ஜூலை 24ம் தேதி மதுரையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

மணிப்பூரில் கடந்த 2 மாதங்களாக நடந்து வரும் தொடர் வன்முறை சம்பவங்களால் பலர் உயிரிழந்துள்ளனர். இதில் பழங்குடி சமூகத்தை சேர்ந்த 2 பெண்களை நிர்வாணமாக அழைத்துச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இது குறித்த வீடியோ நேற்று மந்திரம் சமூக வலைதளங்களில் வெளியாகிய பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


பெண்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட இந்த கொடூர சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. இந்த சம்பவத்திற்கு பொதுமக்கள் முதல் அரசியல் தலைவர்கள் வரை கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் மணிப்பூர் விவகாரத்திற்கு கண்டனம் தெரிவித்து, அம்மாநில முதல்வரை கைது செய்ய வலிருத்தியும், பதவி விலகக் கோரியும் விசிக சார்பில் வரும் ஜூலை 23ஆம் தேதி மதுரையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக விசிக தலைவர் தொல் திருமாவளவன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

VCK protest against Manipur issue on July 23


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->