வன்னியர் இட ஒதுக்கீடு! ஊர் ஊராக மக்களை திரட்டி கொண்டாடும் வன்னியர் சங்க செயலாளர்!  - Seithipunal
Seithipunal


வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீட்டினை கிராமங்கள் தோறும் கொண்டாடும் விதமாக, வன்னியர் சங்க மாநில செயலாளர் க.வைத்தி அரியலூர் மாவட்டத்தில் உள்ள கிராமங்களுக்கு சென்று இனிப்புகளை வழங்கி, இட ஒதுக்கீடு அவசியத்திற்கான விழிப்புணர்வையும், பெற்ற இட ஒதுக்கீட்டால் என்னென்ன நன்மைகள் என்பது குறித்தும் பேசி வருகிறார். 

தா.பழூர் ஒன்றியம் கீழசிந்தாமணி, கோடன்குடி, ஜெயன்கொண்டம் ஒன்றியம் இறவாங்குடி உள்ளிட்ட கிராமங்களில் பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகளிடத்தில் இனிப்பு வழங்கி வன்னியர் சங்க மாநில செயலாளர்  வைத்தி பேசினார். 

10.5% இட ஒதுக்கீட்டினால், கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னிய சமூகத்திற்கு கிடைக்கவுள்ள பலன்களை விரிவாக எடுத்துரைத்தார். நாற்பதாண்டு காலமாக இந்த இட ஒதுக்கீட்டிற்காக இடைவிடாமல் போராடி வந்த மருத்துவர் ராமதாஸ் சந்தித்த கஷ்டங்களையும் போராட்டங்களையும் எடுத்துரைத்த அவர், இட ஒதுக்கீட்டை பெற்றுக்கொடுத்த மருத்துவர் ராமதாஸ் உள்ளிட்ட பாமக தலைவர்களுக்கு நன்றியும், போராட்டத்தில் பங்கெடுத்த மக்களுக்கும் நன்றியை தெரிவித்து கொண்டார். 

பின்னர் அங்கு கூடியிருந்த மக்கள் அனைவரும் இட ஒதுக்கீட்டை பெற்று தந்த மருத்துவர் ராமதாஸ், மருத்துவர் அன்புமணி உள்ளிட்ட அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி கூறினார்கள். 

இதுபோல ஒவ்வொரு மாவட்டத்திலும் கொண்டாடட்டம் ஆனது நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. முன்னதாக பாமக, வன்னியர் சங்க, சமூக முன்னேற்ற சங்க நிர்வாகிகள் அனைவரும் திண்ணை பிரச்சாரம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Vanniyar Sangam State Secretary celebrates vanniyar reservation with village peoples


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->