அரக்கோணம் கொலை விவகாரம்.! சாதிவெறிபிடித்த 'டைம்ஸ் ஆஃப் இந்தியா' பத்திரிகை மீது காவல்நிலையத்தில் புகார்.!  - Seithipunal
Seithipunal


அரக்கோணத்தில் குடிபோதையில் நடந்த சண்டையை வன்னியர்களின் மீதும் பாமக மீதும் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் செய்தி வெளியிட்ட, டைம்ஸ் ஆஃப் இந்தியா (Times Of India) பத்திரிகை மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, பாமகவின் வழக்கறிஞர் பாலு மற்றும் வன்னியர் சங்கத்தின் மாநில செயலாளர் க.வைத்தி ஆகியோர் காவல் துணை கண்காணிப்பாளர் அதிகாரியிடம் புகார் அளித்துள்ளனர்.

அவர்களின் அந்த புகார் மனுவில், "இராணிப்பேட்டை மாவட்டத்தில் குடிபோதையில் இரு கோஷ்டிகளுக்கிடையே நடந்த மோதலில் இரண்டு பேர் கொலை செய்யப்பட்டனர். இது சம்மந்தமாக அரக்கோணம் டவுன் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. 

இந்நிலையில் கடந்த 09.04.2021 அன்று வெளியான டைம்ஸ் ஆப் இந்தியா (Times of tnain) பத்திரிக்கையில் 20 க்கும் மேற்பட்ட வன்னியர்கள் சேர்ந்து இரண்டு தலித் சமூகத்தை சார்ந்த இளைஞர்களை கொலை செய்துள்ளனர் (Vammlyas Kin 2 dalit youths in clash near Arakkonam . Gang of 20 Attacked Five Using Logs , Broken battles) என்று செய்தி வெளியிட்டுள்ளனர். 

இச்சம்பவத்தில் இரண்டு கோஸ்ட்டிகளுக்கு இடையே நடந்த மோதலால் இருவர் கொலை செய்யப்பட்டுள்ளனர். அதன் தொடர்ச்சியாக வயல் வெளியில் அறுவடை செய்து குவித்து வைத்திருந்த நெல் குவியல்களையும், டிராக்டரையும் கொளுத்தி சாம்பலாக்கியுள்ளனர். 

இது சம்மந்தமாக காவல் துறையினர் முறையான புலன் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், வழக்கினை திசை திருப்ப வேண்டுமென்ற நோக்கத்தோடு, ஒரு சமூகத்தினருக்கும் இடையே கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கத்தோடும் தலித் சமூகத்தை சார்ந்த இரண்டு பேரின் இறப்புக்கு வன்னியர்கள் தான் காரணம் என்று Time of India பத்திரிக்கையில் செய்தி வெளியாகியுள்ளது அதிர்ச்சியளிக்கிறது.

இவ்வாறு அச்சிடப்பட்டு வெளியான செய்தி இணையதளத்தில் மக்களிடையே வேகமாக பரவி வருகிறது. எனவே திட்டமிட்டு விண்வதந்தியை பரப்பவேண்டுமென்ற தீய எண்ணத்தோடும், தமிழகத்தில் சமூக நல்லிணக்கம் நிலவி வரும் நிலையில், இரு சமூகங்களுக்கிடையே மோதலை ஏற்படுத்த வேண்டுமென்ற காழ்ப்புணர்ச்சியோடும் வதந்தி பரப்புதல், வன்முறையை தூண்டுவது, சமூக நல்லிணக்கத்தை சீர்குலைப்பது, வன்னியர் சமூகத்தினர் மீது வீண்பழி சுமத்த வேண்டுமென்ற கெட்ட எண்ணத்தோடு உண்மையான தகவலை மறைத்து பொய் செய்தியை வேண்டுமென்றே Times of India பத்திரிக்கை வெயிளிட்டுள்ளது. 

இது தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு ஏற்பட ஊன்றுகோலாய் அமைகிறது. எனவே, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட தூண்டுதலாகவும், சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையிலும், செய்தி வெளியிட்ட Times of India பத்திரிக்கையின் ஆசிரியர், வெளியிட்டாளர் மற்றும் நிருபர் ஆகியோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென பணிவுடன் கேட்டுக் கொள்கின்றேன்." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

vanniyar sangam complaint against times of india


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->